கோபிச்செட்டிபாளையம் : பிப்ரவரி 26, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் கடந்த 21 ஆம் தேதியன்று 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் தலைமையில் சென்னையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி உரையாற்றினார். கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட தகவல் சுற்றறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல அமைப்பாளர் ஆகியோர் முன்னெடுப்பில் கட்சியின் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் திரு.சிவகுமார் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவும் வழங்கப்பட்டது. கட்சியின் பொறுப்புகள் பெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுகமும் அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டதும், நினைவுப்பரிசுகள் வழங்கியதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும், முதியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கோபிசெட்டிபாளையத்தில் விமரிசையாக நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திரு.மூகாம்பிகா ரத்னம், கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. செவ்வேள், திரு. தாஜுதீன், திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. ஜீவா, திரு. மோகன்ராஜ், திரு. வரதராஜ், திரு. பழனிவேல், திரு. சசிகுமார், திரு. முருகன், திரு. முரளி கிருஷ்ணா, திரு. மகேந்திரன், திரு. ஜாகிர் ஹாசன், திரு. முஜிபுர் ரஹ்மான் மற்றும் திரு.செந்தாமரைக் கண்ணன், திரு. சத்தியநாராயணன், திரு. சிராஜுதீன், திரு. ஜெய்கணேஷ், திரு. சௌந்தர்ராஜன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

இதையொட்டி 3 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, ஓரிடத்தில் 8-ம் ஆண்டு தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் 8 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், ஆதரவற்றோர் இல்லத்தினருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நேகாஶ்ரீ அரங்கில் நடைபெற்ற விழாவில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

விருந்தினர்களின் சிறப்புரைக்குப் பின்னர், ஆதரவற்ற முதியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு, இரவு உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சிகளில், மக்கள் நீதி மய்யம் மாவட்டப் பொருளாளர் திரு. J.டோனி, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. G.P.கார்த்திகேயன், திரு. V.கார்த்திகேயன், திரு. V.A.கணேஷ், திரு. R.கல்யாண், திரு. V.பிரதீப், திரு. A.சோபன்பாபு, திரு. C.மணிகண்டன், நகரச் செயலாளர்கள் திரு. முகமது இப்ராஹிம், திரு. B.கமாலுதீன், ஒன்றியச் செயலாளர்கள் திரு. K.G.சரவணன், திரு. V.R.பழனிசாமி, திரு. A D.பிரகாஷ், நற்பணி அணி ஒன்றிய அமைப்பாளர் திரு. S.விஜயராஜ், திருமதி. V.அமுதா, திரு. ராஜா, நகர வட்டச் செயலாளர் திரு. A.சிவக்குமார், நற்பணி அணி பேரூராட்சி அமைப்பாளர் திரு. K.வேலுச்சாமி, கலிங்கியம் ஊராட்சி செயலாளர் திரு. குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #MNM8THYEAR #மநீம8ம்ஆண்டு