மார்ச் 02, 2025
“மக்கள் நீதி மய்யம்” தலைவரான “திரு.கமல்ஹாசன்” அவர்கள் நிறுவனராக கொண்டு இயங்கி வரும் “கமல் பண்பாட்டு மையம்” புராதன தப்பாட்டம், பறை, தேவராட்டம் போன்ற கலைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து நடத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல் பண்பாடு மையம் சார்பில் கடந்த 2024 ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மொழிபெயர்ப்பாளர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்றுநர் திரு.ஜி. குப்புசாமி அவர்கள் பயிற்சியளித்தார். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களையும் பயிற்சி வல்லுனரான திரு.ஜி.குப்புசாமி அவர்களையும் தமது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து உரையாடினார். அங்கே அயல்நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதும் திரைத்துறை சம்பந்தப்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்வது குறித்தும் உரையாடினார். மொழிபெயர்ப்பு கொள்கைகள் குறித்தும் தமது கருத்துக்களை பகிர்ந்தார். விருந்து உபசரிப்புடன் இனிதே நிறைவுற்றது.
“மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்த, கமல் பண்பாட்டு மையத்தின் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பயிற்றுனர்.
கமல் பண்பாட்டு மையம் நடத்தி வரும் மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இளம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர் திரு. ஜி.குப்புசாமி ஆகியோரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தனது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, தமிழில் அவசியம் வெளியாக வேண்டிய இலக்கிய நூல்கள், துறைசார் புத்தகங்கள் குறித்தும், மொழிபெயர்ப்புக் கொள்கைகள் குறித்தும் அவர்களுடன் தலைவர் உரையாடினார். மேலும், திரைப்படத் தயாரிப்பு, திரைக்கதை, திரைப்பட ரசனை குறித்து எழுதப்பட்ட சில முக்கியமான புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி மொழிபெயர்ப்பாளர்களுக்கு தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்தார்.” – மக்கள் நீதி மய்யம்




கடந்த ஆகஸ்டு மாதத்தில் வெளியான அறிவிப்பு