சென்னை : ஏப்ரல் 03, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அறவழிப்போராட்டம் அதாவது எந்த சிக்கலையும் சட்ட ரீதியாக அணுகுவதே சாலச்சிறந்தது என்பார். அதற்கான பல நிகழ்வுகள் அவருக்கு நடந்துள்ளது. அனைத்தும் நீதி வழியாகவே மீட்டெடுத்தார். அதைப் போன்றே மக்கள் நீதி மய்யம் கட்சி என்றைக்கும் மக்களுக்கான பணியில் தன்னை இணைத்துக் கொள்ளும் என்பதற்கு மதுரவாயல் தொகுதியின் மாவட்டச் செயலாளர் திரு.பாசில் மற்றும் நிர்வாகிகளின் அறவழி நகர்வுகள் சாட்சியாக நிற்கிறது.

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள நெற்குன்றம் பட்டேல் நகர் பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்கும் பொருட்டு, அப்பகுதியை சேர்ந்த சிலரால் ஆக்கிரமிக்கும் வகையில் பொய் வழக்கு புனையப்பட்டது. அதனை மக்கள் நீதி மய்யம் மற்றும் வழக்கறிஞர் திரு.திருமூர்த்தி அவர்களுடன் இணைந்து துணிச்சலாக எதிர்கொண்டது. அதன் ஒவ்வொரு கட்டமும் நிகழ்ந்தவைகள் மற்றும் வழக்கு மேற்கொண்ட விதம் என அனைத்தும் விரிவாக பதியப்பட்டுள்ளது.

மதுரவாயல் – நெற்குன்றம் 145 வது வார்டு பட்டேல் நகர் பகுதி மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்கும் பணியில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், சென்னை மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நெற்குன்றம் பட்டேல் நகர் பகுதியில் பாரம்பரியமாக குடியிருந்து வரும் மக்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் புனையப்பட்ட பொய் வழக்குகளை மக்கள் நீதி மய்யம், வழக்கறிஞர் திரு. திருமூர்த்தி அவர்களின் துணையுடன் எதிர்கொண்டது.

இந்த வழக்கில், வாழ்விடப் பாதுகாப்பு தொடர்பான முடிவை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரின் முடிவுக்கே விட்டுவிடுவதாக தலைமை நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையரை மக்கள் நீதி மய்யம் மதுரவாயல் மாவட்டச் செயலாளர் திரு. ஃபாசில் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பட்டேல் நகர் பகுதி மக்களின் வாழ்விடத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதையடுத்து, நெற்குன்றம் பட்டேல் நகர் பகுதி வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மதுரவாயல் மாவட்டச் செயலாளர் திரு.பாசில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, பட்டேல் நகர் பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.

மேலும், அப்பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில்தான் பெரும்பாலான மக்கள் வசித்து வருகிறார்கள் என்றும், சிலரால் புனையப்பட்ட வழக்கால் அப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படக் கூடாது என்றும் ஆணையரிடம் விளக்கினர். அதேநேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வருவாய்த் துறை ஏன் இன்னும் பட்டா வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக தனி நபர் தொடர்ந்த வழக்கு நியாயமற்றது என்றும் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கினர்.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் முன்வைத்த வாதங்களைப் பொறுமையாகக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடமிருந்து உரிய விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகத் தெரிவித்ததுடன், சர்வே எண் தொடர்பான குழப்பங்களைக் களையும் வகையில், மீண்டும் நிலப்பரப்பு அளவீடு செய்ய வட்டாட்சியருக்கு உத்தரவிடுவதாகவும் உறுதியளித்தார். மேலும், இப்பகுதி மக்களின் வசிப்பிடம் தொடர்பான ஆவணங்களைச் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆணையர் அவர்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் முறைப்படித் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மக்கள் நலனைப் பாதுகாப்பதே லட்சியம் என்ற இலக்குடன் பயணித்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழியில் செயல்படும் மதுரவாயல் மாவட்டச் செயலாளர் திரு. ஃபாசில் அவர்களின் இந்தக் களப் போராட்டத்துக்கு வட்டச் செயலாளர் திரு. லட்சுமிபதி, நிர்வாகிகள் திரு. வேலு, திரு. ரவி, திரு. மதுசூதன ராவ், திரு. திருவிற்பாண்டியன், திரு. சண்முகம், திரு. லட்சுமி நாரயணன் ஆகியோர் உறுதுணையாகச் செயல்பட்டனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்