திருச்சி ஜனவரி 15, 2022
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தனது ஸ்திர தன்மையை இழந்து 18 மற்றும் 19 ஆம் தூண்கள் வலிமையிழந்து இருந்த காரணத்தால் அடித்து செல்லப்பட்டது.
இதற்கெல்லாம் முன்னதாக பலவீனம் அடைந்த பாலம் 2007 முதலே கனரக வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2016 இல் சுமார் 88 கோடிகள் ரூபாய் செலவில் பழைய பாலம் அருகிலேயே நேப்பியர் பாலம் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட பாலத்தின் மீது பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது முற்றிலும் சிதிலம் அடைந்ததால் இனிவரும் காலங்களில் மழைப் பொழிவின் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் புதிய பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என யூகிக்கப்படுகிறது.
எனவே பழைய பாலத்தை முற்றிலுமாக இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விட்டு இடிப்பதற்கு உண்டான செலவுத் தொகையாக 3.10 கோடியாக இருக்கும் என கூறப்படுவதை கேட்டு துணுக்குற்ற பொது மக்களுக்கு இவ்வளவு செலவு செய்து ஒரு பாலத்தை இடிப்பதற்கு பதிலாக இன்னும் கூடுதலாக கொஞ்சம் செலவு செய்து செப்பனிட்டு தந்தால் மக்களின் நடைபயிற்சி செய்ய உபயோகம் ஆக இருக்கும் எனவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது அதை ஓர் நினைவு சின்னமாக கொள்ளலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வழக்கறிஞரும் மக்கள் நீதி மய்யம் திருச்சி மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் கிஷோர் குமார் கூறுவதாவது யாதெனில் “எதையும் இடிப்பது சுலபம் ஆனால் அதை உருவாக்குவது கடினம்” எனவே நெடுஞ்சாலை துறையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து இந்த விஷயத்தில் சுமூகமான ஓர் முடிவை எடுப்பது சிறப்பு என்று கூறுகிறார்.