தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு – திருவள்ளுவர்
பொருள் : பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்
(குறள் எண் > 613 பால் > பொருட்பால் இயல் > அரசியல் அதிகாரம் > ஆள்வினையுடைமை)
“நீங்கள் தயாரித்து வெளியிடும் படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகாமல் ஏன் நட்டம் வந்தாலும் மீண்டும் ஓர் சினிமா தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என இவரிடம் கேட்டால் அதற்கு ஓர் விவசாயி நெல் விதைத்து நீர் பாய்ச்சி வளர்த்து அறுவடை செய்ய முற்படுகிறார் ஆனால் எதிர்பாராமல் இயற்கைச்சூழல் அவருக்கு நட்டத்தை தருகிறது ஆயினும் மீண்டும் சிறிது காலம் கழித்து வேறு பயிர் சாகுபடி செய்கிறார் இப்போது சற்று பொருள் குறைந்த லாபமாக இருப்பினும் கைக்கு வருகிறது மீண்டும் அதே நிலத்தில் பயிர் செய்கிறார். இப்படித்தான் நானும் எனது தொழில் சினிமா எனக்குத் தெரிந்த ஒரே தொழில் சினிமா எனவே மீண்டும் மீண்டும் என்னை இயங்க வைக்கும் சினிமாவை நான் எனக்கு என சுயநலமாக யோசித்து லாபம் வரவில்லையே என நொந்து கொள்ளாமல் அதிலேயே முதலீடு செய்கிறேன் நான் அறுவடை செய்யும் பொருள் என்னவோ சிலவேளைகளில் சொற்பமாக இருந்தாலும் என்னால் முடிந்தவரையில் மக்களின் ரசனையை தமிழ்த்திரையுலகில் இருக்கும் உத்வேகத்தை அதன் சிறப்பை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு சிறு தூண்டுகோலாக என்னை நான் இங்கே ஈடுபடுத்திக் கொள்கிறேன் அவ்வளவே (இதை எங்கோ படித்த அல்லது கேட்ட நினைவு அதை அப்படியே தந்துள்ளேன், இதில் துல்லியமான வீடியோ ஏதேனும் இருப்பின் இதனைப் படிக்கும் அன்பர் எவரேனும் தந்து உதவலாம்).
இப்படி சொல்லும் நம்மவர் கமல்ஹாசன் இதுவரை தான் தமிழக மக்கள் தன்னை வரவேற்று ஆதரவு தந்து எனக்கான பொருளாதார தேவைகள் அனைத்தையும் நான் பெற்றுக் கொள்ள ஏதுவாக எனது படங்களை கண்டு என்னை இந்தளவிற்கு பேர் புகழ் பணம் என வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பல நடிகர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு அசையாச் சொத்துக்களாக மாற்றி ஷாப்பிங் மால்கள், திருமண மண்டபங்கள் பண்ணை வீடுகள் என வாங்கிப்போட்டு வருமானம் ஈட்டும் வகையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதை போன்று எதையும் சொத்துக்களாக சேர்த்துக் கொள்ளாமல் மீண்டும் வறிய மக்களின் தேவைகள், உடல்நலம் குன்றிய குழந்தைகள் வாழ்வு மேம்பட பலவழிகளில் அதற்கான பணிகளில் தன்னை தன் வருமானத்தை செலவிடும் கமல்ஹாசன் அவர்கள் தனது திரையுலகைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் நொடித்துப் போன நிலையில் தன்னால் இயன்ற வகையில் அவர்களுக்கு நடித்துக் கொடுத்து அவர்களை தன்னிடம் உதவி கேட்பவர்கள் ஆக நடத்தாமல் சுய கவுரவத்துடன் தயாரிப்பாளர் ஆகவே மீண்டும் திரையுலகில் நிலைநிறுத்திய நல்ல மனசுக்கு சொந்தக்காரர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள்.
தமிழ்த்திரையுலகில் மிகச்சிறந்த படைப்பாளிகள் உண்டு அவர்கள் தங்களின் பொருளாதார நிலை தாழ்ந்த வேளைகளில் அவரது படைப்புகள் பண பற்றாகுறையால் அவர்களின் படைபுதன்மை மங்கிவிடக் கூடாது என்றும் நன்றாக வளர்ந்த வாழ்ந்த ஒருவர் பொருளாதார ரீதியாக இழப்பைச் சந்தித்து சோர்ந்து போகும்போதெல்லாம் அவர்களின் பொருளாதார வாழ்வு மேம்பட தன்னால் இயன்ற வகையில் அதனால் தனக்கு என்ன லாபம் பெயர் புகழ் கிடைக்கும் என்ற கணக்குகள் எதுவும் போடாமல் அவரின் வாழ்வாதார தாழ்வு நிலை போக்கிட தாமாக முன்வந்து அதற்கான தகுந்த செயலை முன்னெடுத்து தரும் ஓர் ஒப்பற்ற மனிதனாக நம்மவர் தனது திரையுலக வாழ்வில் பலரது சிக்கல்களை தீர்த்து வைத்துள்ளார்.
உதவிடும் மனிதர்கள் சிலருண்டு. அவற்றில் சிலர் இன்னும் பலர் அவ்வப்போது வருவார்கள், அவர்களின் மனதை வென்ற நம்மவர் பற்றிய நல் விடயங்களை சொல்வார்கள்.