கோவை, ஜனவரி 20, 2022
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் ஜனவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று (22/01/2022) இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் திரு.A.பாலு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற உள்ளது.
அப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது, எனவே இந்த நிகழ்வை பயனாளிகள் பெற்று தகுந்த முறையில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தவிருக்கும் முகாமில் என்னென்ன வகையான சிகிச்சைகள் மற்றும் அவைகளை எந்த பாகுபாடும் இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கீழ்காணும் பட்டியலில் குறிப்பிட்டு உள்ள சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயன் அடையலாம் என இணைக்கப்பட்டுள்ள கைப்பிரதியில் தெளிவாக பட்டியல் இடப்பட்டுள்ளது.
எங்களின் இலக்கு வாக்கு அரசியல் மட்டுமல்ல மக்களின் நலனே வெகு முக்கியம் என மீண்டும் மீண்டும் நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
Follow-Up
இதற்கு முன்னதாக அறிவித்தபடி கடந்த சனிக்கிழமை அன்று (22.01.2022) ஊராட்சி ஒன்றியப் பள்ளி, சாமளாபுரம் எனும் இடத்தில் திருப்பூர் மாவட்டம் கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தி ஐ பவுண்ட்டேஷன் மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை சிகிச்சை சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தி வைத்தனர்.
மக்கள் நீதி மய்யம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அனுஷா ரவி அவர்கள், கோவை மண்டல அமைப்பாளர் ரங்கநாதன் அவர்கள் சிறப்பு முகாமை தலைமை வகித்து தொடங்கி வைத்தனர்.
மேலும் அவர்கள் இந்த சிறப்பு முகாமை திறம்பட ஏற்பாடு செய்த பேரூராட்சி நகர செயலாளர பாலு அவர்கள் மற்றும் மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட செயலாளர் மனோரம்யன் அவர்களும் கலந்து கொண்டார் அப்பகுதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் மய்யம் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.