தமிழகம் மார்ச் 24, 2022
தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கவும் உள்ளார். சுமார் 6 மாதங்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சி வரும் 31 ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் அரங்கில் மார்ச் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரம் கடைபிடிக்கபடுகிறது.
தமிழ் அரங்கை இன்று திறந்து வைக்கும் முதல்வர் அவர்கள், தொழில்துறை, சுற்றுலா, மருத்துவம், கலாச்சாரம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட பல சிறப்புகள் காட்சிப் படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுகிறது.
இதற்காக சென்னையில் இருந்து தனிவிமானத்தில் சென்ற முதல்வருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர், வழிகாட்டி மேலாண்மை இயக்குனர் ஆகியோர் உடன் சென்றனர்.
விமான நிலையத்தில் முதல்வரை துபாய் நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்து அதிநவீன காரில் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அங்குள்ள தமிழர்களின் வரவேற்பினையும் பெற்றுக்கொண்டார்.
இவர்கள் தவிர முதல்வரின் குடும்ப உறுபினர்கள் பலரும் பின்னதாக துபாய்க்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் அறியப்படுகிறது, அவர்களும் துபாயில் அலுவல் நிமித்தமாக சென்றனரா என்று சரிவர தெரியவில்லை.
துபாயில் வரவேற்பு அளிக்கையில் தரப்படும் பூங்கொத்தை மருமகன் சபரீசன் வாங்கிக் கொள்கிறார், அரசு முறை பயணம் எனில் அங்கே மருமகனுக்கு என்ன பணியாக இருக்கக்கூடும் ? கலைஞருக்கு பின்னர் ஸ்டாலின் அவர்களும் குடும்ப அரசியலை முன்னெடுத்து நகர்கிறாரா என கேள்வி எழும்புகிறது.