கோவை ஆகஸ்ட் 05, 2022
உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும் திமுக அரசு ஆட்சியமைத்த நாள் முதற்கொண்டு பல வழிகளில் தனது சுயரூபத்தை காண்பித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 2021 நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 500+ வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார் திமுக வின் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், அதன்படியே தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்காக சுற்றுப்பயணம் செய்கையிலும் மின்சார கணக்கீடு மாதம் ஒருமுறை என மாற்றப்படும் என்றும் 487 ஆவது எண் கொண்ட வாக்குறுதியில் கொரொனோவால் நலிவடைந்த பொருளாதாராம் சீராகும் வரை தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் உயர்த்தப்பட மாட்டாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் மேற்சொன்ன இரண்டு வாக்குறுதிகளையும் தங்களின் வசதிக்கேற்ப எந்த நிபந்தனையும் கவலையும் இன்றி மக்களின் நலனை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் காற்றில் பறக்க விட்டது ஆளும் திமுக அரசு.
பெரும் பணப்பட்டுவாடாவில் கோவையை மூழ்கடித்து தலைவர் திரு கமல் ஹாசன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வெற்றியை சூழ்ச்சியாக களவாடிய கழகங்கள் மத்தியில் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஆளும் கட்சியினை அதன் செயல்பாடுகளை உற்றுநோக்கி வரும் மக்கள் நீதி மய்யம் எந்த வெற்றியையும் பெறாமல் இருந்தாலும் மக்களுக்கான பணியில் மக்களுக்காக கிடைக்க வேண்டிய சகல உரிமைகளையும் அரசுக்கு சுட்டியபடி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தங்களின் சுயநலத்திற்காக உட்கட்சிப் பூசல்களிலும் கடந்த ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் முகாந்திரத்தில் அமலாக்கத்துறையின் விசாரணை வலையத்திற்குள் மெதுமெதுவாக நகரத் துவங்கி விட்டார்கள். ஆளும் திமுக அரசின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் இது போன்ற விஷயங்களில் சற்றும் அக்கறை கொள்ளாதது போல் அமைதியாக கடந்து விடுகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
நேர்மையின் அடையாளமாக திகழ்ந்து வரும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் தூய்மையான அரசியலை பின்பற்றி வரும் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தங்களை தலைவரின் உத்தரவுகளின் படியும் அறிவுரை மற்றும் மேற்பார்வைகளின்படியும் தொடர்ந்து மக்களுக்கான அரசியலில் களத்தில் நிற்கிறார்கள் என்பதற்கு இன்று கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் மார்கெட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமே சாட்சி.
ஆளும் திமுக அரசின் மின்சார கட்டணம் உயர்வும் மற்றும் சொத்துவரி உயர்வையும் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழக அரசையும் மத்திய பிஜேபி அரசையும் எதிர்த்து கட்டண உயர்வையும் கண்டித்தும் அவற்றை திரும்பப்பெற வேண்டியும் கோஷம் எழுப்பினர்.
துணைத் தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் & குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் – திருமதி.மூகாம்பிகை ரத்தினம், மாணவரணி மாநில செயலாளர் – திரு.ராகேஷ் ராஜசேகரன், கோவை மண்டல அமைப்பாளர் – திரு. ரங்கநாதன், மகளிர் & குழந்தைகள் நல அணி மண்டல அமைப்பாளர் திருமதி அருணா, மண்டல அமைப்பாளர் ஊடக அணி – திருமதி ரம்யா, மாவட்ட செயலாளர்கள் திரு.பிரபு, திரு.தம்புராஜ், திரு. சிட்கோ சிவா, நற்பணி இயக்க அணி திரு.சத்யநாராயணன் உட்பட மாவட்ட, பகுதி, ஒன்றியம், நகரம் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னின்று ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினார் மய்யத்தின் மாநகர செயலாளர் திரு.தாஜுதீன்.