சென்னை, ஆகஸ்ட் 20, 2022

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் உலகின் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெறும் முனையமாக இருந்து வருகிறது. அதன் அருகிலேயே மற்றொரு பன்னாட்டு விமான நிலையம் கார்கோ பிளைட்டுகள் எனப்படும் சரக்குகளை சர்வதேச நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்துகளை கையாலும் விமான நிலையமாக உள்ளது.

சென்னையில் தாம்பரத்திற்கு அருகிலும் பாரிமுனையிலிருந்து அண்ணாசாலை வழியாக செல்லும் சாலைகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும், பல நேரங்களில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது எனவும் அதனால் விமான நிலையத்திற்கு பயணிகள் சென்று சேர்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால் மத்திய அரசின் விமான போக்குவரத்து திட்டத்தின் கீழ் சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் சுமார் 4700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட விருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கென 2700 ஏக்கர் அரசு நிலங்கள் உபயோகப்படும் எனவும் மேலும் தேவைப்படும் 2000 ஏக்கர் நிலங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 14 கிராமங்களில் உள்ள பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்த போவதாக அறிவித்திருந்தது.

மத்திய அரசோ மாநில அரசோ என எதுவாக இருப்பினும் தனியார்வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தபடவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பகுதி வாழ் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் பங்குபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டங்கள் நடைபெறவேண்டும் என்பது விதிகளில் ஒன்று ஆனால் இது தொடர்பாக எந்த கருதுக்கேட்பு கூட்டங்கள் நடைபெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அரசின் நிலங்கள் போக மீதம் தேவைப்படும் 2000 ஏக்கர் நிலங்கள் சுற்றுவட்டாரமான 14 கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் உட்பட பெரும்பாலானவை நீர் பாசனம் கொண்டு விவசாயம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த 14 கிராமங்களிலும் இந்த திட்டத்திற்கு பலமான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த பொதுமக்கள் விளை நிலங்களை கையகப்படுத்தும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர். விவசாயம் நடந்து வரும் விளைநிலங்களை அழித்து நிர்மாணிக்கப்படும் விமான நிலையத்தால் உண்ணுவதற்கு தேவையான அரிசி முதலான காய்கறிகள் ஆகியவற்றை அந்த கான்கிரீட் தளங்களில் விளைவிக்க முடியுமா என வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க தனியார்வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் நடந்துள்ள பகீர் கிளப்பும் முறைகேடுகளை அமபலமாக்கி உள்ளனர் அறப்போர் எனும் சமூக செயற்பாட்டாளர்களை கொண்ட பொதுநல அமைப்பு.

புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மற்றும் நெல்வாய் கிராமங்களில் உள்ள நிலங்களின் வழிகாட்டு மதிப்பினை பல மடங்கு ஏற்றி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததன் மூலமாக அரசுக்கு 165 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதே பகீர் கிளப்பும் தகவலாகும்.

உதாரணமாக அப்பகுதிகளில் உள்ள நிலத்தின் மதிப்பு 1 ஏக்கர் வழிகாட்டுதல் விலை 8.7 இலட்சங்கள் என கணக்கிட்டால் 73 ஏக்கர்கள் விலை 6.35 கோடிகள் வரும் ஆகும். ஆனால் அரசிடமிருந்து கையகப்படுத்தும் விலையாக இவர்கள் நிலத்தினை மதிப்பினை பலமடங்கு உயர்த்தி 1 ஏக்கர் விலை 65.45 இலட்சங்கள் என தங்கள் சுயலாபத்திற்கு நிர்ணயித்து 73 ஏக்கர்கள் கிரையத் தொகையாக 47.77 பத்திரம் ரிஜிஸ்தர் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு சுமார் 165.69 என்பது மிகப்பெரிய தொகையாகும்.

73 x 8.7 லட்சம் ஏக்கர்கள் வழிகாட்டு விலைப்படி மொத்தம் 6.35 கோடிகள்

அரசின் இழப்பீடு 6.35 x 4 மடங்கு = 25.40 கோடி

ஆனால் செயற்கையாக உயர்த்தப்பட்ட விலை விபரங்கள்

73 x 65.45 லட்சம் = 47.77 கோடி x 4 மடங்கு = 191.08 கோடிகள் இழப்பீடு தொகையாக வரும்படி கணக்கிட்டு கொண்டார்கள்.

செயற்கையாக தருவிக்கப்பட்ட தொகை 191.08 ( – ) அசல் இழப்பீடு 25.40 = 165.68 கோடிகள் அரசுக்கு முறைகேடாக இழப்பீடு உண்டாகும் தொகையாகும்.

இதற்கெல்லாம் காரணமாக சிண்டிகேட் அமைத்து பத்திரங்களை பதிவு செய்ததில் இருந்த முரண்பாடுகளை கண்டு உணர்த்தியபோது இதனை பதிவு செய்ய மறுத்த மாவட்டப் பதிவாளரை பதிவு செய்யும்படி வற்புறுத்தி உள்ளார் கூடுதல் பத்திரப்பதிவு துறை கூடுதல் தலைவர். அதுமட்டுமல்லாது இவர் மீது முன்பே பல புகார்கள் பதிவாகி உள்ளது என்பதும் கூடுதல் தகவல் அப்படி பதிவான புகார்களின் முகாந்திரம் கருதி இவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மேலும் இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத் தன்மையை குலைப்பதாக உள்ளது.

இதைக் குறிப்பிட்டு மக்கள் நீதி மையம் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது அதன் விபரங்கள் உங்கள் பார்வைக்கு.

“புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது. தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்குப் பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்குக் கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர், நிலத்தைப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்ட இந்த உயரதிகாரி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதும் அவர்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் “சட்டத்தின் ஆட்சி” நடக்கிறது என்று முதல்வர் @mkstalin @CMOTamilnadu தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால், பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பத்திரப்பதிவுத்துறையின் அமைச்சர் திரு மூர்த்தி, தலைவர் ஆகியோர் இதுபோன்ற முறைகேடுகள் நிகழாமல்

இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இலஞ்சஒழிப்புத்துறையானது நடைபெற்ற சட்டமீறலை விரைந்து விசாரித்து முறைகேட்டில் தொடர்புடையோர் அனைவர் மீதும் வழக்குப்பதிந்து சட்டநடவடிக்கைகள் கொள்ள வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்புகிறது.

https://www.dailythanthi.com/News/State/action-should-be-taken-to-prevent-irregularities-in-the-registration-department-makkal-needhi-maiam-demands-774084

https://www.maalaimalar.com/news/state/tamil-news-makkal-needhi-maiam-request-vigilance-police-probe-to-rs-165-crore-loss-issue-502262

https://www.hindutamil.in/news/tamilnadu/844137-irregularities-in-registration-sector-are-flying-high-mnm.html

https://tamil.indianexpress.com/tamilnadu/arappor-iyakkam-complaints-parandur-land-registered-illegally-to-increase-guideline-value-497109/

https://tamil.news18.com/news/kanchipuram/paranthur-airport-land-scam-minister-moorthy-explanation-789367.html