கோவை, ஆகஸ்ட் 26, 2022
சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றிட வேண்டி தெருமுனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து துணைத்தலைவர், மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மா.து.செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட (கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகம், விவசாயம், மகளிர், குழந்தைகள் நலன், நற்பணி இயக்கம், தொழிலாளர் ஆகிய அணிகளை சார்ந்த மாநில & மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர்) அதன்பால் கோரிக்கை எழுப்பிய மக்கள் நீதி மய்யம் – கோவை மாவட்டம், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நேரலையாக ஒளிபரப்பு செய்தனர்.
சிறப்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் நிகழ்ச்சியை பார்த்துச் சென்றார்கள்.
அருமையான ஓர் முன்னெடுப்பைச் செய்து முடித்த மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மய்யத்தமிழர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
சீரமைப்போம் தமிழகத்தை, ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதாகும். வாழ்வு வளமாகும். பிற கட்சிகள் சொல்லத் தயங்கும் கொள்கையான நேர்மை என்பதை எப்போதும் நாம் ஒன்றாக இணைந்து தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.
“சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல் – கமல் ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்
மேற்கூறிய தெருமுனை கூட்டம் பற்றிய முந்தைய செய்திகளின் தொகுப்பு
மாலை நடைபெற்ற தெருமுனைக்கூட்டதிற்கு முன்னதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த துணைத்தலைவர் மற்றும் மாநில செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது சேவை பெறும் உரிமைச் சட்டம் செயல்படுத்த வேண்டிஅதெற்கென நேரம் காண்பிக்கும் கடிகாரம் அதன் மையத்தில் தலைவரின் படம் பொறித்த ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.