தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23
பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள் என சந்தித்திருப்பார்கள்.
பல வகைகளில் பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் இறுதியாக உயிர் போன பின்னும் அவர்களுக்கு பிரச்சினை உண்டாகும் எனில் அது தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு ஊராட்சிக்குட்பட்ட நெடார் ஆலக்குடி கிராம மக்களுக்கு பல காலங்களாக தொடர்ந்து வருகிறது. அது எதுவென கேட்டால் இந்தக் கிராமத்தில் எவரேனும் உயிரிழந்தால் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலைச் சுமந்து செல்ல முறையான பாதைகள் எதுவும் இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இறந்தவர்களின் உடலைச் சுமந்து செல்லும்போது வயல்வெளிகளில் விதைக்கப்பட்டுள்ள பயிர்களின் மீது நடந்து செல்கையில் அப்பயிர்கள் நாசமடைந்து அறுவடையின் போது நெற்கதிர்கள் வீணாகி வருகிறது. மேலும் அவ்வாறு வயல்வெளிகளில் உடலைச் சுமந்து செல்கையில் சேரும் சகதியும் பெரும் சிக்கலைத் தருகிறது. எனவே ஊர் மக்கள் அப்பகுதியில் உள்ள வெட்டாற்றின் அருகில் மயானம் அமைத்துத் தருமாறு பல்லாண்டு காலமாக கோரிக்கைகள் வைத்தும் எந்த அரசும் செவி சாய்க்கவில்லை என்றே தெரியவருகிறது. மேலும் மயானத்திற்கு சரியான பாதை அமைத்துத் தருவதிலும் சிக்கல் நிலவுவதாக அறிய நேர்ந்தது.
இறந்த பின்னும் அவர்களின் உடல்கள் முறையான பாதை வழியே கொண்டு செல்லப்பட்டு இருதிசடங்குகளை நிறைவேற்றிட வழிவகை செய்ய வேண்டும் மற்றும் பாதை அமைக்க முடியாத பட்சத்தில் ஊர்ப் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் பகுதியில் மயானம் அமைக்க நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அழுத்தமாக ஆளும் தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெடார் ஆலக்குடி கிராமத்தில் யாராவது உயிரிழந்தால், அவரது உடலை மயானம் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லை. விளை நிலங்கள் வழியே மயானத்துக்கு உடலைத் தூக்கிச் செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. இதனால், அறுவடை நேரத்தில் நெற்கதிர்கள் வீணாகின்றன.
சேறும், சகதியும் நிறைந்த பாதையில் உடலைத் தூக்கிச் செல்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அருகில் உள்ள வெட்டாற்றின் கரையிலேயே மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கிராம மக்களின் பல்லாண்டுகால கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
மயானத்துக்கு சாலை அமைப்பதிலும் சிக்கல் நிலவுவதாகத் தெரிகிறது. எனவே, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, வெட்டாற்றின் கரையில் மயானம் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்