தமிழ்நாடு பிப்ரவரி 12, 2௦23
நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தில் பயணிக்கிறேன்? #2: மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஜூன் 2021 முதல் நான் #MNM தொண்டர்களுடனும் கட்சியின் பொறுப்பாளர்களுடனும் பல்வேறு முறைகளில் தொடர்பு கொண்டு பணியாற்றியுள்ளேன். அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.
நூற்றுக்கணக்கான தொடர்புகளில் இதுவரை ஒருமுறை கூட யாரும் என்னை என் சாதி மதம் மொழி பற்றி கேட்டதில்லை. நானும் கேட்டதில்லை. இது ஒரு காரணமே போதும் நான் இந்த கட்சியில் தொடர்ந்து பயணிப்பதற்கு. மனிதம் > மதம்
#பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்கு அரசியலில் நாகரீகம் வர வேண்டும் என்பது என் கருத்து. இதுவரை #MNM இல் நான் பார்த்தது, பெண்களுக்கு சம உரிமை மட்டுமல்ல, பெண்களை பெரும் மரியாதையுடன் கண்ணியத்துடனும் பேசுவதும் நடந்து கொள்வதும். இது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சி அளிக்கிறது.
அரசியலில் நாகரீகம்: பொது வெளியிலும் குழுக்களிலும் பேசும் போது மற்றவர்களை மரியாதை உடனும், கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரீகம் தவறாமல் தன் கருத்தை சொல்வதும் தான். நான் பங்கு பெற்ற குழுக்களில் இதனை நான் பார்த்தேன்.
குழுக்களில் பேசும் போது எப்படி குறுக்கு வழியில் வெல்வது என்று பேசுவதை நான் கேட்டதில்லை. ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றி நான் கேட்டதில்லை. அதனை ஒரு பேச்சாகவே கொண்டு வராத தொண்டர் கூட்டம் நாளை அரசாங்கம் அமைத்தால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க மாட்டார்கள்.
90% தொண்டர்கள், சொந்த ஆதாயத்திற்காக கட்சிப்பணி செய்வதில்லை. நம்மவர் அன்பாலும், அரசியல் மாற்றம் வேண்டும் என்றதாலும் தான். மற்ற கட்சியைப் போல் இல்லாமல் பொறுப்பில் இருந்தாலும் வருவாய் இல்லை. இருந்தும் கட்சிக்காக வேலை செய்பவர்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
#MNM தொண்டர்கள் 99% மேல் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலையிலோ படிப்பிலோ ஈடுபடுகிறவர்கள் தான். தன் குடும்பத்தின் தேவைகளுக்காக வேலை பார்த்துக்கொண்டு, குடும்ப பொறுப்புகளையும் நிறைவேற்றி, பின்னர் சமுதாயத்திற்க்காக கட்சியில் தொண்டாற்றுகிறார்கள். #Salute
#MNM இல் அனைத்து தரப்பு தொண்டர்கள் உள்ளனர். ஆங்கிலம் தெரியாதவர்கள், ஆங்கிலம் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களும். தினம் சம்பளம் வாங்குபவர்களும், பணம் அதிகம் உள்ளவரும். வெவ்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் உள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதே ஒரு மகிழ்ச்சி. #diversity
#கமல்ஹாசன் நற்பணி இயக்கத் தோழர்கள் 40 வருடங்களுக்கு மேல் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி பல்வேறு நற்பணிகளை செய்தது அறிந்து மிகப் பெரிய மரியாதை வந்தது. சிறு வயதில் இருந்து ரசிகன் என்றாலும், இந்த மாதம் தான் நற்பணி இயக்கத்துடன் நற்பணி செய்ய தொடங்கியுள்ளேன் #KamalHaasanFans
100% தொண்டர்களும் நல்லவர்கள், பிரச்னையே இல்லை என்றால் என் நேர்மையில் தவறிவிடுவேன். 90% நல்லவர்கள் என்பது என் கணிப்பு. சிலருக்கு தனிப்பட்ட குறிக்கோள்கள் உண்டு. சிலர் பொறுப்பில் கடமை தவறியுள்ளார்கள். குழுக்களுக்குள் ஈகோ சண்டை. பொது வெளியில் அநாகரீக பதிவுகள். #mostlygood
இவ்வுலகில் 100% perfect எதிர்ப்பார்ப்பது தவறு என்று நம்புகிறேன். ஒன்று மட்டும் முழு நம்பிக்கையுடன் சொல்வேன்: இந்த மாதிரி ஒரு தொண்டர் படை வேரூன்றிய பெரிய கட்சிகளில் நிச்சயம் இருக்காது. #MNMVolunteers உடன் பயணிப்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி .
எழுத்து & கட்டுரையாக்கம் : திரு தினேஷ்
–