ஒத்த கருத்துள்ள ஒரு சிறிய குழுவாக இணையத்தில் சேர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முடிந்த வரை உழைக்கும் மய்யத்தினர்.
நாங்கள்
மக்கள் நலன் சார்ந்த அரசு தமிழகத்தில் அமைய விரும்புபவர்கள்
மக்களின் செல்வத்தை கொள்ளை செய்யா அரசு வரும் என்று நம்புபவர்கள்
தமிழ்நாட்டின் வளங்களை சூரையாடாமல் அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும் என்று எண்ணுபவர்கள்
ஆள் பலம், பண பலம், பதவி பலம் இல்லாமலும் அரசியலுக்கு வர முடியும் என்ற நாளுக்கு ஏங்குபவர்கள்
அணைத்து மனிதருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் மக்கள் ஆட்சிக்கு காத்திருப்பவர்கள்
எங்கள் பணிகளில் சில இங்கே.
ஆகஸ்ட் 2021 – கட்சியின் வளர்ச்சிக்கு உதவி
மக்கள் நீதி மையத்தின் தலைமைச் செயலகத்திற்கு மையத்தமிழர்களின் அன்பளிப்பாக மேடை மற்றும் ஸ்பீக்கர் வழங்கினோம்.

செப்டம்பர் 2021 – maiatamizhargal.com
இந்த இணையதளம் ஆரம்பமானது.
இதன் குறிக்கோள்கள்
1) மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் செயல்பாடுகளையும் நற்பணிகளையும் தொகுக்க
2) மக்கள் நீதி மய்யத்தின் மீது எதிர் கட்சிகள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பதில் பதிவு செய்ய
3) மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை பதிவு செய்து விளக்க
4) ஆளும் கட்சிகளின் தவறான செயல்பாடுகளையும் இரட்டை நிலையும் மக்களுக்கு கொண்டு செல்ல
அக்டோபர் 2021 – உள்ளாட்சி தேர்தல்
மய்யத்தமிழர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த வேட்பாளர்களுக்கு முடிந்த உதவியை செய்தோம்.


இலவசங்கள் இல்லை, ஓட்டுக்கு பணம் இல்லை, பொருட்கள் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒவ்வொரு ஓட்டும் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி மய்ய உறவுகளின் உழைப்புக்கு கிடைத்த பலன். நன்றி மக்களுக்கு. இந்த முறை தவறிய வெற்றி அடுத்த முறை நிச்சயம் இருக்கும்.
அக்டோபர் 2021 – நற்பணி
மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி அன்பருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புதிய மூன்று சக்கர சைக்கிள் வாகனம் ஒன்றை அன்பளிப்பாக மாநில செயலாளர்,திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள் தலைமையில் வழங்கினர் மய்யத்தமிழர்கள்.

Vaccination Drive






Food Donation Drive

நவம்பர் – நற்பணி

தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக 500 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி.


ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.

நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.
டிசம்பர் 2021 – கட்சியின் வளர்ச்சிக்கு உதவி
வீடு தோறும் நம்மவர் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் சென்றடைய வேண்டி எங்களின் முயற்சி இப்படி செயல்வடிவம் ஆக. உங்களின் ஒவ்வொரு நாளையும் நல்லதாய் துவங்கிட உத்வேகம் காட்டிட, நேர்மையை உணர்த்திட, நல்லெண்ணங்கள் விதைத்திட, நல்லாட்சியை நிச்சயம் ஓர் நாள் அமைத்திட வைக்கும் நாட்காட்டி.
