விருதுநகர் ஜனவரி 18, 2022
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார். அகாலமாய் மரணம் அடைந்தநிலையில் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும் பொருளாதார ரீதியாக தொய்வினையும் அடைந்தனர். இதனால் அவரது மகன் அபினேஷ் கார்த்திக் படிக்கும் கல்லூரி படிப்பு தடைபட்டது.
இதனை கண்ணுற்ற நமது மய்யம் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கல்லூரிக் கல்வி தடைபடாமல் இருக்க ரூபாய்.30000/-தை செல்வன் அபினேஷ் கார்த்திக்கிடம் உள்ளன்போடு அளித்தனர், நிகழ்வில் வழக்கறிஞரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் அருப்புகோட்டை பாஸ்கரன், நற்பணி அணியின் மாவட்ட அமைப்பாளர் மார்ஷல், ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் மகளிர் அணி முகேஸ்வரி மற்றும் மய்யம் நிர்வாகி கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

