திரு கமல்ஹாசன் அவர்கள் கூறியதாவது
நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர்; சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. அவரது நினைவுகளைப் போற்றுவோம்.
தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் Dr அம்பேத்கரை பற்றி நெகிழ்ச்சியாக பேசியவை
துணை தலைவர் திரு மௌரியா (IPS ஓய்வு) அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் தொகுதி கல்லுக்குட்டை குடிசைப்பகுதியில்யிலுள்ள Dr அம்பேத்கரின் சிலைக்கு , மாவட்ட செயலர் ராஜீவ்குமார் உடன் சென்று மாலை அணிவித்தார். எளிய மக்கள் அடிப்படைவசதி, சுகாதாரமின்றி வாழ்வதைப்பார்த்து வருத்தமடைந்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் நினைவேந்தல் – பொள்ளாச்சி மநீம அலுவலகத்தில் திருமதி மூகாம்பிகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு

