பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த திரு முத்துகுமார் தலைவர் நம்மவரின் தீவிர ரசிகர். திரையில் தனது ஆத்மார்த்த தலைவன் என்ன நல்லவை எல்லாம் செய்தாரோ அதை அப்படியே பின்பற்றுபவர்.
பெரம்பலூர் கமல் ஹாஸன் நற்பணி இயக்க மாவட்ட தலைவரான இவர் யாரிடம் பேசினாலும் இரண்டு முக்கிய விஷயங்களை சொல்வார். தேய்ந்து அழியலாமே அன்றி துருப்பிடித்து சாகக் கூடாது என்றும் மற்றவர் உயிர் காக்க இரத்த தானம் செய்யுங்கள் என்பார்.
இவை இரண்டும் கமல் ஹாஸன் அவர்கள் சொன்னது என்றாலும் அதை மறக்காமல் இதுவரை 33 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.
உன்னால் முடியும் தம்பி படம் பார்த்துவிட்டு அதில் நாயகி சீதாவை சாதி ஒழிப்பு கலப்புத் திருமணம் செய்வது போன்றே தானும் தனது வீட்டாரிடம் பேசி முடிவு செய்து அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு நல்ல தலைவன் சுயநலம் அற்று எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ அவ்வாறே தனது ரசிகர்களும் அமைவது வெகு சிறப்பு.
