சென்னை : பிப்ரவரி 14, 2025
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் பற்றியும் ஆலோசனைக் கூட்டம் எழும்பூர் ம.நீ.ம மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள தலைமை அலுவலகத்தில் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

“மக்கள் நீதி மய்யம் எழும்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை ஆலோசிக்கும் வகையிலும், கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், எழும்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சீனிவாசன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஸ்வரி, நகரச் செயலாளர்கள் திரு. ராமச்சந்திரன், திரு. கமல், திரு. அமுதன், வட்டச் செயலாளர்கள் திரு. சித்திக், திரு. கருணா, திரு. ரவி, திரு. ஸ்ரீதர், திரு. ரமேஷ் பாபு, திரு. வேலா, திருமதி. சுப்புலட்சுமி, திரு. சுதாகர், திரு. வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.” – மக்கள் நீதி மய்யம்



