மதுரை : மே 21, 2025
மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளியின் முன்வாசலருகில் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் வடிகால் கால்வாய் குறித்த தகவலை மனுவாக பள்ளிகல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்தனர். அதையடுத்து அதிகாரிகளும் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடித்து திறந்த நிலையில் இருந்த கால்வாயை சரியாக மூடச் செய்து நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக செயல்பட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள் இணையதளம்.



மதுரை மாநகராட்சி 3வது வார்டு ஆணையூர் பகுதியில், இயங்கி வரும், CEOA பள்ளியின் முன்புறத்தில், திறந்தவெளியில் காணப்படும் கழிவுநீர் வாய்க்காலால் பள்ளி வரும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் மட்டுமின்றி சிலநேரங்களில் விபத்துகள் நடந்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.பத்மா ரவிச்சந்திரன் (மதுரை, நெல்லை மண்டலங்கள்), மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.பெ. கலையரசி, நிர்வாகி திருமதி. நிரோஷ் பானு, மதுரை கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் திரு.கண்ணன் ஆகியோர் இணைந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
மனு கொடுக்கப்பட்ட ஒரே நாளில், அப்பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்