சென்னை : செப்டம்பர் 21, 2024
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், இணை துணைச்செயலாளர்கள், நற்பணி அணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வரவேற்புரை தொடங்கி தீர்மானங்கள் முன்மொழிதலும் அதனை வழிமொழிதலும் நடந்தேறியது. மக்கள் நீதி மய்யத்தின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருங்கே உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் சிறப்பான நிகழ்வுகள்.
“மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், நமது தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்” : – மக்கள் நீதி மய்யம்











நன்றி : மக்கள் நீதி மய்யம், சமூக ஊடக பக்கம்