ஜனவரி : 11, 2024
சாதனைகள் புரிய வயதோ, உடல்பலமோ முக்கியமில்லை, முயற்சியும், பயிற்சியும் , மனவலிமையும் அமையபெற்றால் நமது பெயர் வரலாற்றில் பதிவாகும் எனும் வாக்கிற்கேற்ப ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட பதினான்கு குழந்தைகள் உலகசாதனை படைக்க வேண்டி கடற்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இது போன்ற சாதனைகளை மனதார பாராட்டி வாழ்த்துகளை கூறி தேவையானவைகளை செய்து தரும் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து தாம் மேற்கொள்ளவிருக்கும் கடற்பயணம் குறித்த தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டு வாழ்த்துகளை பெற்றார்கள். நம்மவர் அவர்களும் அக்குழந்தைகளின் மன உறுதியை கண்டு மெச்சி தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.
“உலக சாதனைக்கான கடற்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட 14 குழந்தைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்” தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்



#KamalHaasan #MakkalNeedhiMaiam