சென்னை : மே 14, 2025
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் UNICEF லாப நோக்கமற்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள். குழந்தைகளின் செயல்பாடுகள் பலதரப்பட்டவை. சுகாதாரம், ஊட்டசத்து, பாதுகாப்பு, கல்வி என பலவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்கள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கு கொண்ட கருதரங்கம்ம் நடைபெற்றது. இதில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்கள்” குறித்து UNICEF நடத்திய அனைத்துக் கட்சிக் கருத்தரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன், மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி.ஸ்னேஹா மோகன்தாஸ் (சென்னை, காஞ்சி, விழுப்புரம் மண்டலங்கள்), மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.B. சந்துரு, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.நான்சி ப்ரிசில்டா, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.ரூபாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். – மக்கள் நீதி மய்யம்


நன்றி : மக்கள் நீதி மய்யம்