சென்னை : மே ௦1, 2023
100 ஆவது மே தினம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற் சங்க பேரவையுடன் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. கட்சியின் சார்பில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற்சங்க பேரவையோடு இணைக்கப்பட்ட மய்யம் ஐசிஎப் தொழிற்சங்கம் சார்பில் நூற்றாண்டு மே தினத்தை முன்னிட்டு சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு. கமல் கோமகன் அவர்களின் முன்னிலையில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, ஐசிஎப் பகுதியில் வெள்ளாளர் தெரு, காந்தி நகர் மருத்துவமனை அருகில், ஐசிஎப் காந்தி நகர் சந்திப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் மய்யக்கொடியை கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்களும், ஐசிஎப் காந்தி நகர் பகுதியில் தொழிற்சங்க பேரவை கொடியை நம்மவர் தொழிற்சங்க பேரவை தலைவர் திரு. S பொன்னுசாமி ஆகியோர் மய்யக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதன் பிறகு ஐசிஎப் பேருந்து நிலையம் முன் மய்யம் ஐசிஎப் தொழிற்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை துணைத்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் பழ வகைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மய்யம் ஐசிஎப் தொழிற்சங்கத்தின் தலைவரும், நம்மவர் தொழிற்சங்க பேரவை துணைத் தலைவரும், மக்கள் நீதி மய்யம் வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளருமான திரு. கே.மாடசாமி அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் நம்மவர் தொழிற்சங்க பேரவை பொருளாளர் திருமதி. மா.பானுமதி, துணைச் செயலாளர் திரு. எஸ்.சுரேஷ், சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. மாறன், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சரவணகுமார், தொழிலாளர் நல அணி மண்டல அமைப்பாளர் திரு. டி.சேகர், மாவட்ட அமைப்பாளர் திரு. ராம்சேகர், மகளிர் அணி மாவட்டஅமைப்பாளர் திருமதி.ஜெனிதா, ஆதிதிராவிட அணி மாவட்ட அமைப்பாளர் திரு.ராமநாதன் உடன் மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்”. – மக்கள் நீதி மய்யம்








மக்கள் நீதி மய்யம் – சென்னை வடக்கு (மத்திய) மாவட்டம் பெரம்பூர் தொகுதி சார்பாக நடைபெற்ற மே தின விழாவிற்கு அமைக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் ப்ளெக்ஸ் பேனர்கள்



