சென்னை, நவம்பர் 24, 2௦22
கடந்த இரண்டு நாட்களாக பயணம் மேற்கொண்டு முக்கிய ஆளுமைகளை சந்தித்த தலைவர் அவர்களுக்கு சற்றே காய்ச்சல் ஏற்படவும் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் நிவாரணம் குறித்தான சிகிச்சை அளித்து பின்னர் வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் அளித்த சிகிச்சை பற்றி விளக்கமளித்து இன்னும் ஓரிரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை மருத்துவக் குழுவினர் & நிர்வாகம் மூலம் தலைவர் அவர்கள் சிறிது நாட்கள் ஒய்வு எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
