வேலுநாச்சியார்,வ.உ.சி.சிதம்பரனார், பாரதி உருவங்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.
குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத் தாங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களை சர்வதேச அளவில் யாருக்கும் தெரியாது என அதிகாரிகள் பதில் அளித்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றனர்..
பள்ளி பாடப்புத்தகத்தில், கல்லூரிகளில், அரசுத் தேர்வுகளில், மத்திய அரசு அலுவலகங்களில் என எங்கும் எதிலும் ஹிந்துத்துவாவைப் புகுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் பாஜக அரசு இப்போது தேசத்தின் குடியரசுத் தினத்திலும் தனது கைங்கர்யத்தைக் காட்டுகிறது? எதில்தான் அரசியல் செய்வது என்பதில் ஒரு வரையறை இல்லையா ? மக்களாட்சியின் மகத்துவங்களை ஒன்றொன்றாக பலியிடும் பாஜக அரசு திருந்திக் கொள்ள வில்லை எனில் அதன் விளைவுகளை எதிர்வரும் ஐந்து மாநில தேர்தல்களில் நிச்சயம் எதிர்கொள்ளும் எனவும் மக்கள் நீதி மய்யதின் துணைத் தலைவர் தங்கவேலு தனது அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.