சென்னை நவம்பர் 21, 2௦22
தமிழ்த்திரையுலகில் கதை திரைக்கதை வசனகர்த்தாவுமான முதுபெரும் கலைஞர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் வயதின் மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு கமல் ஹாசன்.

ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. – கமல்ஹாசன்