ஏப்ரல் : 21, 2025

ரோமன் கத்தோலிக்க 266 ஆவது திருத்தந்தையாக போப் ஆண்டவர் திரு.பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். சுமார் 12 ஆண்டுகளாக வாடிகன் நகர தலைவராக ஊழியம் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டதில் நிமோனியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. முறையான சிகிச்சைக்குப் பிறகு வாடிகன் திரும்பினார் போப் அவர்கள். புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் தினங்களில் பொதுமக்களிடையே தோன்றி வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கிடையே வயது மூப்பின் காரணமாகவும் சுவாசக் கோளாறு காரணமாகவும் இன்று தனது 89 வயதில் இயற்கை எய்தினார்.

ஆண்டில் திருத்தந்தையாக பதவியேற்ற பின்னர் முதல் சுற்றுமடலில் நம்பிக்கை ஒளி என்று தலைப்பிட்டு ஜூன் 29 அன்று 2013 ஆண்டில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் போப் ஆண்டவர் மறைவிற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

“I offer my deepest condolences to the Catholic community around the world on the passing of Pope Francis. A champion of peace, a humble reformer, a voice for the poor, and a bridge between faiths — he was a moral compass in a fractured world. The world mourns a spiritual leader who placed humanity above all.” – Dr. Kamal Haasan, President – Makkal Needhi Maiam

தலைவரின் இரங்கல் செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியின் சாம்பியன், ஒரு தாழ்மையான சீர்திருத்தவாதி, ஏழைகளுக்காக குரல் கொடுப்பவர், நம்பிக்கைகளுக்கு இடையே ஒரு பாலம் – அவர் ஒரு பிளவுபட்ட உலகில் ஒரு தார்மீக திசைகாட்டியாக இருந்தார். மனிதநேயத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்த ஒரு ஆன்மீகத் தலைவருக்கு உலகம் துக்கம் அனுசரிக்கிறது

Makkal Needhi Maiam President Dr.Kamal Haasan offers his heartfelt condolences on the passing of Pope Francis. A great moral force in our times – his legacy of compassion, reform, and interfaith harmony will continue to inspire. – Makkal Needhi Maiam