கோவை : பிப்ரவரி 12, 2024
கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் இதனை சுட்டிக்காட்டி கோவை மாநகர ஆட்சியரிடம் காந்திமா நகருக்கு அரசு பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என சென்ற ஆண்டில் கோரிக்கை மனு அளித்தனர், இதனிடையே அரசு பேருந்து போக்குவரத்து கழகத்திடமும் பல முறை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக அளித்து வந்தனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிச்சயம் பேருந்து வசதி செய்து தருவதாக வாக்களித்தனர். ஆயினும் ஓராண்டு முடிந்த பின்னரும் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.
ஆகவே இந்த 2024 வருடம் துவங்கிய ஜனவரி மாதம் முதலே கிட்டத்தட்ட நான்கு முறை பேருந்து போக்குவரத்து அதிகாரிகளிடம் நேரில் சென்று சந்தித்து நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் துவங்கிட வேண்டும் என்றும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பெரும் சிக்கலைச் சந்திக்கிறார்கள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வதால் அதிக செலவினமும் நேரம் தாமதம் உண்டாகிறது என எடுத்துச் சொல்லி இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக காந்திமா நகருக்கு பேருந்து சேவைகள் தொடங்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தந்தனர். இறுதியாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளின் உறுதியான போராட்டத்தை உணர்ந்த அரசு போக்குவரத்து கழகம் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் தமது பகுதிக்கு துவங்கப்பட்ட பேருந்து சேவை குறித்து மிகவும் மகிழ்ந்த மக்கள் இதற்காக தொடர்ந்து குரலெழுப்பி போராடிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர், அவ்வமையம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை தூய்மையான அரசியலை அதனுடன் இணைந்த மக்கள் பணிகளை பாராட்டி அரவணைத்து செல்லும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கும் உளமார நன்றி தெரிவித்தனர்.
பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்து வந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக எழுத்து மூலமாக மனுக்கள் அளித்தும் நேரில் பல முறை சென்று சந்தித்து மீண்டும் பேருந்து சேவையை துவக்கிட உறுதுணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அனைவருக்கும் மய்யத்தமிழர்கள்.காம் ம.நீ.ம சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
#MakkalNeedhiMaiam #Coimbatore #GandhimaNagar #GovernmentBusService #KamalHaasan