நம்மவர் – நவம்பர் 26, 2024

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் Constitution Day of India அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நாளான நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு கொண்ட நாடு என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும்.

இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திய சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களையும் அவருடன் இணைந்து செயல்பட்ட சட்ட வல்லுனர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்நாள் போற்றப்படுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள். தனது திரைத்தொழிலில் இடர்கள் நேரும்போதெல்லாம் அவர் சட்டத்தையே நாடினார் அதில் வெற்றியும் பெற்றார். எனவே இந்திய நாட்டின் சிறந்த குடிமகனாக திகழ்ந்து வருபவரான நம்மவர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்தான பெருமைமிகு கருத்துக்களை மக்களிடையே பகிர்ந்துள்ளார். அதன் ஆங்கில வடிவமும் தமிழ் வடிவமும் இங்கே பதியப்பட்டுள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது மக்கள் நீதி மய்யத் தலைவர் நம்மவர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய அரசியலமைப்பு நாள் குறித்தான கட்டுரையின் தமிழாக்கம்.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம் எழுதப்பட்டது. இரண்டு ஆண்டுகள், பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள் அயராத விவாதங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதிலும் இருந்து 299 ஆண்களும் பெண்களும் இந்திய அரசியலமைப்பை பெருமையுடன் இயற்றுவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் ஒன்று சேர்ந்தனர் – இது என்னைப் புனிதப்படுத்திய ஓர் ஆவணம் என கருதுகிறேன். ஏனெனில் நாம் இந்திய மக்கள் நம்மை நாமே ஆள்பவர்கள் என்ற ஒப்பிலாத கருத்தை முன்வைப்பதால்.

இத்தகைய தொலைநோக்கு பார்வையுடயவர்கள் நாட்டின் நன்மைக்காக ஒன்றுபட்டு அதன் அரசியலமைப்பை வழங்கினர். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் அனைவருக்கும் நீதி எனவும் சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பின் அடையாளமாகவும் நிற்கும் ஜனநாயக கட்டமைப்பு நிர்வாகத்தின் அடிக்கல்லாக உள்ளது.

ஆயினும் கூட நவீன இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கட்டமைத்த சட்ட வல்லுனர்கள் நமது எதிர்கால இந்தியாவின் ஆவணத்தை அவர்கள் நாடிய தேசத்தை உருவாக்க முனைகையில் பாராளுமன்ற ஆட்சி முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டது. பிரிவினையின் அதிர்ச்சி பரவலான வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட சூழலில் அதனால் பல மில்லியன் கணக்கானவர்களை ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்த்திருந்தது.

மனித வரலாற்றில் மிகப்பெரிய வெகுஜன இடப்பெயர்வும் அதன் எல்லைகளில் போர் மூண்டது. புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு அனைவரையும் ஒன்றுபடுத்தும் கடினமான பணியை எதிர்கொண்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த மக்கள் மிகவும் மாறுபட்ட மரபுகளுடன் கூடிய அந்த நேரத்தில் உலகளாவிய பார்வையாளர்கள் இந்தியாவின் ஸ்திரத்தன்மை குறித்தும் சந்தேகம் கொண்டிருந்தனர். பன்முகத்தன்மை கொண்ட ஒருங்கிணைந்த ஓர் நாடாக இயங்கும் இந்தியாவின் ஜனநாயக செயல்பாடுகள் இதே போன்ற நிலையை தாக்குபிடிக்குமா என சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், தேசபக்தர்கள் இதனை ஓர் சவாலாக பார்க்கவில்லை ஆனால் நினைவில் போற்றத்தக்க மகத்தான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வரலாற்றில் முதன்முறையாக இந்திய மக்கள் அனைவரும் இதனால் தாங்கள் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாகவும் கூட்டாகவும் தீர்மானிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியாவின் குடிமக்களுக்கு மட்டுமன்றி பரந்த உலகிற்கும் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஆகும்.

அவர்கள் இந்தியாவின் பண்டைய நாகரிக பாரம்பரியத்தின் மதிப்புகள் சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்கள் மற்றும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை உருவாக்கினர். அது வெறும் சட்ட சாசனம் அல்ல ; ஒரு மக்களாக நாம் யார் நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம். ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கண்ணியத்தையும் எவ்வாறு பாதுகாப்போம் என்பதற்கான அறிவிப்பாக அது இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆட்சிக்கான வரைபடத்தை மட்டுமல்ல சுதந்திரமான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

அந்தக் குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இந்திய வரலாற்றின் போக்கை மாற்றியது மட்டுமல்லாமல் இன்று ஒரு பெருமை மிக்க நாடான சுதந்திர இந்தியாவில் நாம் வாழவும் சுவாசிக்கவும் காரணமாகும் இது உலகம் பின்பற்றுவதற்கு ஏற்ற ஜனநாயகம் மிளிர அதே சமயத்தில் ஒழுக்கத்தின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து பிரகாசிக்கிறது.

தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் நமது அரசியலமைப்பின் மதிப்புகளைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் நிலைநிறுத்தவும் இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும் இந்த ஆவணத்தை நமக்கு வழங்கியவர்களின் பாரம்பரியத்தை மதிக்கவும் உறுதியளிக்குமாறு நான் ஊக்குவிக்கிறேன்.

இன்று அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்க இந்த ஆவணத்தில் பொதிந்துள்ள இலட்சியங்களை மறுபரிசீலனை செய்வோம் மேலும் இதனை இயற்றிட வழிவகுத்த 299 சிறந்த இந்தியர்களை பெருமைப்படுத்தும் விதமாக மறுபிறப்பெடுத்த சுதந்திர இந்தியா மற்றும் புதிய இந்தியாவை திறம்பட கட்டமைக்க இன்னும் முடிக்கப்படாத கனவுகளை நோக்கி உழைப்போம்.” – கமல்ஹாசன்

நன்றி : மக்கள் நீதி மய்யம்