டிசம்பர் 19, 2024

இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து தாம் இனி விளையாடப் போவதில்லை ஓய்வு பெறுகிறேன் என்றும் அறிவித்துள்ளார். சக கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கும் வருத்தம் அளித்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக விளங்கி வருபவர் திரு.அஸ்வின் அவர்கள். முக்கிய தருணங்களில் அஸ்வினின் திறமை பல வெற்றிகளை பெற்றிட உறுதுணையாக இருந்தது எனலாம். இத்தகைய முடிவை எவரும் எதிர்பாராத ஒன்று. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அஸ்வின் அவர்களின் ஓய்வு குறித்தும் இதுவரை அவர் செய்த சாதனைகள் பற்றியும் பெருமிதம் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

You leave behind a legacy as one of the finest spinners the world has ever seen and Tamil Nadu’s greatest ever cricketer, Mr. Aswin Ravichandran. Your fierce competitive spirit and pure cricketing intelligence, unmatched in the modern game, are etched forever in the hearts of cricket lovers. Well done and best wishes for your next chapter.” – Mr.Kamal Haasan, President – Makkal Needhi Maiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்