பரமக்குடி : டிசம்பர் 28, 2024
மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன கழிவறைகளை செப்பனிட்டும் கழிவறை இல்லாதிருந்த பள்ளிகளில் கட்டித் தந்தும் நற்பணிகளை செய்துவருவதை நாம் இங்கே குறிப்பிடாமல் கடந்து போய் விட முடியாது. அவ்வகையில் கடல் கடந்து செயல்படும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா நிர்வாகிகளின் அடுத்த திட்டமே நம்மவர் படிப்பகம்.
மதுரை மலைச்சாமிபுரத்தில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகளின் நன்கொடையில் கட்டப்பட்ட நம்மவர் படிப்பகம், நம்மவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் மதிப்பிற்குரிய திரு.கமல்ஹாசன் அவர்களின் கொடைத்தன்மையால் கொடுத்துச் சிவந்த திருக்கரங்களால் திறக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழாவில் ஏராளமான மக்களிடையே தலைவர் அவர்கள் பேசுகையில் நம்மவர் படிப்பகம் திறக்க காரணமாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தன் மனம் கனிந்த பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்தார். “கல்வி கற்கும் மாணவ மாணவியர் பயன்பெறவும் பொதுமக்களின் புத்தகம் வாசிப்புத்திறன் மேம்படவும் இந்த படிப்பகம் பேருதவியாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டவர் “இது போன்ற பயனுள்ள நற்பணிகளை என்னை நேசிக்கும் அன்பர்கள் உருவாக்கித் தந்திருப்பது எனது மனதிற்கு மிகுந்த நிறைவையும், மகிழ்வையும் தருகிறது” என்றவர் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி “இந்த படிப்பகத்தை பயனுள்ள வகையில் உபயோகித்து மேலும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மட்டுமல்லாமல் பொறுப்புடன் பராமரித்து அடுத்து வரும் தலைமுறையினர் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றும் குறிப்பிட்டார்.
மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகத்தை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்த பின்னர் அங்கே உரையாற்றியபோது வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கட்டித்தந்த இந்த படிப்பகம் போன்ற மற்றொன்றை மக்களுக்குத் தேவைப்படும் வேறோர் பகுதியில் எனது சொந்த செலவில் அதாவது தனது தலைமையில் இயங்கும் கமல் பண்பாட்டு மையம் மூலமாக கட்டித் தருவதாக வாக்களித்தார்.
தலைவரின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் பிறந்த ஊரான பரமக்குடியில் படிப்பகம் அமைப்பதற்குண்டான பணிகளில் கவனம் செலுத்தினர் நிர்வாகிகள். அதன்படி இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மிக வேகமாக நடைபெற்ற கட்டிடப் பணிகளும் மற்றும் இதர பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் இப்போது திறப்புவிழாவிற்கென கம்பீரமாய் நிற்கிறது கமல் பண்பாட்டு மையம், தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நன்கொடையளிக்க கட்டப்பட்டுள்ள பரமக்குடி “நம்மவர் படிப்பகம்”.
மேற்கண்ட ட்விட்டர் பதிவில் மூன்றாவது நம்மவர் படிப்பகம் அருப்புக்கோட்டையில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம்மவர் படிப்பகம் எப்படி கட்டப்பட்டுள்ளது என்றும் என்றும் அதன் இதர பணிகள் நிறைவுற்றது குறித்தும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்கா வின் நிர்வாகக்குழு தலைவரான திரு.மதுசூதனன் அவர்கள் நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார். உடன் அவ்வூர் பொதுமக்களும் உடனிருந்தனர். திறப்புவிழா ஏற்பாடுகள் குறித்தும் ஊர் மக்களுடன் கலந்துரையாடினார். (படங்கள் கீழே)
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகளின் ஒருவரான திரு.செல்வா ராமசாமி அவர்கள் அருப்புக்கோட்டையில் உருவாகி வரும் நம்மவர் படிப்பகம் கட்டிடத்தை பார்வையிடும் காட்சிகள். (படங்கள் கீழே)
https://twitter.com/DhayaTwitz/status/1854703405324710139
https://twitter.com/DhayaTwitz/status/1854726175987322993
நம்மவர் தலைவரின் 70 ஆவது பிறந்தநாளை முதல் நூலகமான மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகம் மற்றும் முறையே பரமக்குடி, அருப்புக்கோட்டை நம்மவர் படிப்பகம் அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார் திரு.மதுசூதன் அவர்கள். மலைச்சாமிபுரத்தில் பேசுகையில் “தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் எங்களுக்குள் நற்பணிகள் எனும் விதைகளை விதைத்ததன் பயனாக அவற்றை நம்மவர் படிப்பகம் என்கிற விருட்சங்களாக செய்திடும் பணியில் இறங்கி அந்த வகையில் முதல் மூன்று படிப்பகங்கள் உருவாகியுள்ளோம். இன்னும் 67 நம்மவர் படிப்பகங்கள் உருவாக்கித் தந்திட வேண்டும் என்கிற உந்துதலில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் கூறியது நம்மவரின் அபிமானிகளின் நல்லெண்ணம் என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தலைவரின் பிறந்த நாளை முன்வைத்து நம்மவர் படிப்பகம் திறக்கப்படுவதாக திட்டமிட்ட போது, பருவநிலை மாற்றம் காரணமாக பெய்துவரும் மழையினால் திறப்புவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இயற்கைச்சூழல் இயல்புநிலைக்கு திரும்பும்போது நம்மவர் படிப்பகம் திறப்புவிழா தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு(கள்) கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா நிர்வாகிகள் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/DhayaTwitz/status/1870218708666417236
கற்றலினால் வாழ்வில் ஒளியேறும் வழியை பரமக்குடி நம்மவர் படிப்பகம் உள்ளே ஒளிர்ந்து காட்டும் விளக்குகளின் வழியே உணர்ந்து கொள்ளலாம்.
மகத்தான பணிகளைச் செய்துவரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் அவர்களுக்கு துணை புரியும் நமது மய்யம் & நற்பணி அணி நிர்வாகிகள் அனைவருக்கும் மய்யத்தமிழர்கள்.com உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி : மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா