அமெரிக்கா : ஜனவரி 18, 2025
நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அன்பால் உந்தப்பட்டு கடல் கடந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அபிமானிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு நிர்வாகிகள் பலரது பங்களிப்பினால் இயங்கி வரும் ஓர் தன்னார்வ அமைப்பு. நடிகராக திரையில் தோன்றி நடித்து அதனால் ஊதியம் பெற்று வருகையில் அதனை போற்றும்வகையில் ரசிகர்கள் கொடி பிடித்து, பேனர் மற்றும் கட் அவுட்கள் வைத்தும் தோரணம் கட்டியும் வருவதை கண்டு மனம் கலக்கம் கொண்டதால் தனது ரசிகர்களின் உடல் உழைப்பும் அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த பணமும் இப்படி தன்னை கொண்டாடுவதற்கு வீணாகிட கூடாதென்ற நோக்கத்தில் தன் பெயரில் இயங்கிவரும் ரசிகர் மன்றங்களை துணிச்சலாக கலைத்து விட்டு அதனை மாபெரும் நற்பணி இயக்கமாக மாற்றம் செய்தார். அவ்வழியாக பொதுமக்களுக்கு பயன் பெரும் வகையில் தனது தலைமையில் இயக்கத்தினை வழிநடத்திச் சென்றார். பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொண்டு அதாவது அன்னதானம், கண் தானம் எளியவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சிறு தொழில்களை மேற்கொள்ளும் வகையில் அதற்கான உபகரணங்களை தானும் வாங்கித் தந்து தன்னை ரசிக்கும் ரசிகர்களையும் தங்களால் இயன்ற வகையில் அவ்வாறான நற்பணிகளை மேற்கொள்ளச் செய்தார்.
அப்படி வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதே கமல்ஹாசன் நற்பணி இயக்கம். கடல் கடந்தும் அமெரிக்காவில் மற்றும் இலண்டன் போன்ற நாடுகளிலும் முறையாக பதிவு பெற்று அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது.
அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பானது தமிழ்நாட்டில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இரத்த தானம், உடல் தானம் மற்றும் உடலுறுப்பு தானம் முதலான நற்பணிகளும், மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் நிவாரண முகாம்கள், தருவோம் கண்ணியம், நாமே தீர்வு, மிச்செங் புயல் நிவாரணம், நம்மவர் படிப்பகங்கள் என மக்களுக்கு பயன்படும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து அவரை அன்பு பாராட்டும் அவரது அபிமானிகளும் நற்பணிகளை செய்து வருவது போற்றுதலுக்குரியது. இவைகளை கருத்தில்கொண்டு அமெரிக்க அதிபரின் “தன்னார்வலர் விருது” – கமல்ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு (வட அமெரிக்கா) வழங்கப்பட்டிருப்பது செய்துவரும் மக்கள் சேவைக்கான சிறந்த அங்கீகாரம் என்பதும் தலைவருக்கும், இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மன மகிழ்வைத் தரக்கூடியது.
https://twitter.com/KHWelfareNA/status/1880465025057370514
“அமெரிக்க ஜனாதிபதியின் “தன்னார்வலர் விருதுகள்” வழங்கும் அமைப்புகளில் உறுப்பினராக நமது வடஅமெரிக்க நற்பணி இயக்கத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது அமெரிக்க அரசு இனி மதிப்பிற்குரிய அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்து இடப்பட்ட சான்றிதழ்களும் விருதுகளும் நமது தன்னார்வலர்கள் பெற ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எங்களை நர்பணி எனும் நல்ல பாதையில் வழிநடத்தி, ஊக்கப்படுத்தி, ஆதரவளிக்கும் எங்கள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்” – கமல்ஹாசன் நற்பணி இயக்கம், வட அமெரிக்கா
#கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம் #KamalHaasan#கமல்ஹாசன்
https://twitter.com/MouryaMNM/status/1880466412474659327
https://twitter.com/isatyagrahaa/status/1881362886447989164
https://twitter.com/KHWelfareNA/status/1881361260580671982
அமெரிக்க அதிபரின் தன்னார்வலர் விருது பெற்ற கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா நிர்வாகிகளுக்கு மய்யத்தமிழர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
#கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம் #KamalHaasan #கமல்ஹாசன்