எழும்பூர் : பிப்ரவரி 09, 2025
மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எழும்பூர் பகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் 8ஆம் தேதியில் நடைபெற்றது சேவை முகாம். கடனுதவி பெறுவதும் இ-சேவைகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என சிறப்பாக நடைபெற்றது.




மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களுக்கான சேவை முகாம். மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எழும்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கான சேவை முகாம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு கடனுதவி பெறுவதற்கான ஆலோசனைகள், இ-சேவைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணிகளும் நடைபெற்றன. இந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் தரவுகள் மற்றும் ஆய்வுப் பிரிவின் மாநிலத் துணைச் செயலாளர் திரு.P.S.ராஜன், சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஸ்வரி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், 108-வது வார்டு நகரச் செயலாளர் திரு. கமல், 77-வது வார்டு நகரச் செயலாளர் திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. சித்திக், திரு.ஆளவந்தான் ரவி, திரு. சுதாகர், தன்னார்வலர் திரு. சத்யா மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் திரு. சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 99-வது வார்டு வட்டச் செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி செய்திருந்தார்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
நன்றி : மக்கள் நீதி மய்யம்