சென்னை, பிப்ரவரி 25, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 21.02.2025 அன்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. அங்கே கட்சியின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவ்வேளையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவரணியில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலரும் மய்யத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் கவனம் ஈர்க்கப்பட்டு தங்களை இணைத்துக் கொண்டு வருவது மனதுக்கு புது உத்வேகமும் நம்பிக்கையும் தருகிறது எனவும் குறிப்பிட்டவர் மாணவர்களும் இளைஞர்களும் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது எனவும் நாளையும் நமதாகும் என்றும் குறிப்பிட்டார்.
