சென்னை : மார்ச் 04, 2025
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆளும் ஒன்றிய அரசு தற்போது மாநிலங்கள் தோறும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது குறித்த சட்ட மசோதாவை அடுத்த ஆண்டு நடப்பில் கொண்டுவர வேண்டிய ஆலோசனைகளும் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இது பல மாநில அரசுகளுக்கு மிகுந்த அதிர்வைத் தந்துள்ளது. ஏனெனில் நமது நாட்டில் சுமார் 14 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற மாநிலங்கள் சட்டபேரவை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் பதிவான வாக்குகள் வைத்து கணக்கிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதனடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாளை நடக்கவிருப்பதால் அக்கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே தமிழக அரசின் அழைப்பை ஏற்று தலைவர் நம்மவர் அவர்கள் நாளை நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு செல்லவிருப்பதாக மய்யத்தின் அதிகாரப்பூர்வ ஊடக பிரிவு தகவல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து, நாளை (05-03-2025, புதன்கிழமை) காலை 10மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்.”
– மக்கள் நீதி மய்யம்

#KamalHaasan_Rejects_Delimitation #KamalHaasan #MakkalNeedhiMaiam