கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக இருந்த அவ்விடம் குழந்தைகள் விளையாட கூட முடியாத நிலையில் மாறிவிட்டது. எந்த உபயோகம் உள்ள பயன்பாட்டிற்கும் உகந்ததாக இல்லாமல் இருந்த அக்குப்பை மேட்டினை சுத்தப்படுத்தி தருமாறு உள்ளூர் அரசு நிர்வாகத்தை அணுகி பலமுறை வேண்டுகோள் மற்றும் புகார்கள் விடுத்தும் அவர்கள் அதைச் செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதனால் ஏற்படும் சுகாதாரக் கேட்டினால் அருகாமையில் வசிக்கும் பல வயதினருடைய மக்கள் தொடர்ந்து உடல்நலகுறைவால் அவதிப்படுவது வாடிக்கையாகிப் போனது.
அரசு நிர்வாகம் உங்களின் நண்பன் எனும் வார்த்தை பொய்த்துப்போனது. அதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் மகளிர் அணியினர் களத்தில் இறங்கி சீர் செய்ய முடிவெடுத்து அதற்கான செயலில் இறங்கினர். கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கரம் கோர்த்து நின்று சுறுசுறுப்புடன் அவ்விடத்தை சுத்தம் செய்து குப்பைகள் நீக்கி சமன் செய்து முடித்தனர்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை எனும் கூற்றின்படி சிறப்பாக செயல்பட்ட மகளிர்அணியின் பங்களிப்பை பாராட்டினர் அப்பகுதியை சேர்ந்த மக்கள்.
நமது தலைவர் அவர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார் “சாத்தியம் என்பது வெறும் சொல் அல்ல ; செயல்”