சென்னை : ஏப்ரல் 04, 2025

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மய்யத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து சார்பு அணிகளும் தத்தமது கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் அறிந்தவர் தலைவர்.

மீனவர்களின் நலனில் பெருமளவில் அக்கறை கொண்டவர் நம்மவர் தலைவர் அவர்கள். கடல் கடந்து வாழ்வாதாரத்திற்கு மீன் பிடி தொழிலை செய்துவருவதில் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை ஒன்றிய அரசும் மாநில அரசும் தலையிட்டு அவர்களுக்கு உரிய சலுகைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது தெரிந்ததே.

அதனடிப்படையில் தலைவரின் ஆலோசனைப்படியும் வழிகாட்டுதல்படி மீனவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவர்களது அடிப்படை வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களுடைய குறைகளை நிவர்த்திச் செய்யும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து சீர் செய்யவும் அதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் திரு.பிரதீப்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கான ஏற்பாட்டை மாவட்ட செயலாளர் திரு.அசேயல் அவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சியின் அமைப்பு மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

மக்கள் நீதி மய்யம் மீனவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கள ஆய்வு.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மீனவச் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அயராது பாடுபட்டவர். மீனவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.

தலைவரின் வழிகாட்டுதல்படி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், தற்போது மீனவச் சமுதாயம் எதிர்கொண்டுவரும் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளை களையவும், அவர்களின் குறைகளையும், பிரச்சினைகளையும் ஆராய்ந்து, அவற்றுக்குத் தக்க தீர்வுகாண கட்சியின் மீனவரணி மாநிலச் செயலாளர் திரு.பிரதீப்குமார் அவர்களின் தலைமையில், மக்கள் நீதி மய்யம் மீனவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. அசாயேல் அவர்களின் ஏற்பாட்டில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. ரமேஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஜவஹர், திருச்செந்தூர் மாவட்டப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. மதன், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சக்திவேல், தொழிலாளர் அணி இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் திரு. செந்தில் குமார், மீனவரணி ஊராட்சி அமைப்பாளர்கள் திரு. பிரகாஷ், திரு. லாட்மென், திரு. பெர்லின், ஒன்றிய அமைப்பாளர் திரு. ஜோசப், நகர அமைப்பாளர் திரு. அசோக், நகரச் செயலாளர் திரு. பிரபாகர், துணைச் செயலாளர் திரு. சின்ன துரை மற்றும் திரு. ஜெயப்பிரகாஷ், திரு. ஜீவன், திரு. ஆனந்த், திரு. அருள், திரு. சிலுவை, திரு. சிலுவை தோமஸ், திரு. ரோஜர், திரு. பிரேடு, திரு. ரூபஸ், திரு. நவஜோதி, திரு. மிசாயேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து, அப்பகுதி மீனவ மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், தினமும் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகளை ஆராய்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், மீனவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்