மதுரவயல் : ஏப்ரல் 09, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்காற்ற வேண்டிய பணிகள், கட்சியின் களப்பணிகள் பற்றிய வழிமுறைகள் என மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது இந்த ஆலோசனைக் கூட்டம். மதுரவாயல்-பூவிருந்தவல்லி ம.நீ.ம மாவட்டச் செயலாளர் திரு.பாசில் அவர்களின் ஏற்பாட்டிலும் மற்றும் தலைமையிலும் நடைபெற்றது.

https://twitter.com/maiamofficial/status/1909927882534584589

மதுரவாயல் – பூந்தமல்லி மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயற்குழுக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்பேரில், மதுரவாயல்-பூந்தமல்லி மநீம மாவட்டச் செயலாளர் திரு.பாசில் அவர்களின் தலைமையில், மதுரவாயல் நகரச் செயலாளர் திரு. K.திருமுகன் அவர்களின் ஒருங்கிணைப்பில், வட்டச் செயலாளர் திரு. R.ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் தலைவர் அவர்களின் திட்டமிடுதலின்படி செயல்படுவது, தலைவர் உத்தரவிடும் தேர்தல் பணிகளை திறம்படச் செய்து முடிப்பது, சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் களப் பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. B.ரூபலிங்கம் (ஆதிதிராவிட நல அணி), திரு. V.ஜெய்சங்கர் (நற்பணி அணி), திரு. T.J.ஆனந்த் (இளைஞரணி), திரு. R.அப்ரோஸ் (மாணவரணி), மாவட்ட துணை அமைப்பாளர்கள் திருமதி. E.சங்கீதா (சமூக ஊடக அணி), திரு. K.S.ரவி (நற்பணி அணி), நகர செயலாளர்கள் திரு. M.மதிவாணன், திரு. K.திருமுருகன், திரு. M.இலட்சுமி சுந்தரராமன், திரு. V.S.பிரகாஷ், நகர அமைப்பாளர் திரு. B.பாலகிருஷ்ணன் (நற்பணி அணி), வட்டச் செயலாளர்கள் திரு. V.திருமலை, திரு. B.ஷண்முகப்பிரியன், திரு. J.L.ராஜகுமார், திரு. S.லட்சுமிபதி, திரு. R.ரவிக்குமார், திரு. V.சுகுமார், நிர்வாகிகள் திரு. V.சுகுமார், திரு.சேகர், திரு. ரமேஷ்குமார், திரு. அபிஷேக், திரு. ராஜேஷ், திரு. பழனி, திரு. பாலமுருகன், திரு. வேலு, திரு. ரவி, திரு. மதுசூதனராவ், திரு. அகிலன், திருமதி ரஜினி, திரு. ரமேஷ், திரு. ரவி, திரு. சரவணன், ஆகியோருடன் மாணவர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. B.சந்துரு அவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1910322557003117034

நன்றி : மக்கள் நீதி மய்யம்