ஏப்ரல் 14, 2025

உலகம் போற்றும் சட்ட மாமேதை அண்ணல் பாபா சாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று சமத்துவம் பேசுவதோடு நில்லாமல் அதனை தனது தலைமையில் செயல்படும் அரசியல் இயக்கமான மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடங்கியது முதல் தனிப்பட்ட முறையிலும் தலைவர் என்கிற முறையிலும் செயல்படுத்தி வருகிறார் என்பது தெள்ளத் தெளிந்த உண்மை. சாதி, மதம், இனம், மொழி கடந்த ஓர் ஒப்பற்ற தலைவராக நம்மவர் திகழ்கிறார். நீ இன்னாரென எந்த அடையாளமும் எங்கள் கட்சிக்கு கிடையாது அது தேவையுமில்லை என அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தும் வருகிறார் என்றால் மிகையாகாது. ஒற்றுமை போற்றுதும் சமத்துவம் போற்றுதும் மட்டுமே முக்கியம் எந்த வர்ணமும் பூசப்படுதல் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வருவதோடு நில்லாமல் சமத்துவம் சகோதரத்துவம் என நாட்டின் இறையாண்மைக்கு எந்தவித இடையூறும் வந்திடா வண்ணம் நாம் நமது எல்லோருக்குமான சம அரசியலில் மக்கள் நீதி மய்யமும் அதன் ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகிகளும் தொடர வேண்டும் என திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.

தலைவர் எவ்வழியோ உடன்வரும் தொண்டர்களும் நிர்வாகிகளும் அவ்வழியே செயல்படுகிறார்கள் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எக்காலத்திலும் பொருந்தக்கூடியவைகள். போற்றத்தக்க தலைவர் பிறந்தநாள் இன்று அவரது எண்ணங்களை உயர்த்திப் பிடிப்போம். கற்போம் கற்பிப்போம்.

நமது மய்யத்தமிழர்கள்.com தலைவணங்கி அண்ணலுக்கு மரியாதை செலுத்துகிறது.