உதகமண்டலம் : ஏப்ரல் 15, 2025
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சி.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடந்தேறியது.




https://twitter.com/maiamofficial/status/1912105437966524543
மக்கள் நீதி மய்யம் சார்பில் ஊட்டியில் முப்பெரும் விழா !
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் உதகமண்டலம் மநீம மாவட்டம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா ஊட்டியில் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன், மாநிலச் செயலாளர் திரு.சிட்கோ சிவா முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஏழை மக்களுக்கு உடைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசெல்லுதல், பூத் கமிட்டியை வலுப்படுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், மக்கள் நீதி மய்யம் மண்டல அமைப்பாளர்கள் திரு.முகமது சித்திக், திரு. தாஜுதீன், மாவட்டச் செயலாளர்கள் திரு. அபுபக்கர் சித்திக், திரு. பாபு, திரு. பிரபு, திரு. மயில் கணேஷ், திரு. வரதராஜ், திரு. முஜிபுர், திரு. குரு, நிர்வாகிகள் திரு. சத்தியநாராயணன், திரு. சிராஜ், திரு. ஜெய்கணேஷ், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ரவி, திரு. காஜா திரு. பிரஸ்னேவ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு. H.ஜாகீர் ஹாசன் தலைமையில், உதகை மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. S.செல்வம் திரு. B.R.வினோத், நகரச் செயலாளர்கள் திரு. ரபீக், திரு. சாலமன் சார்லஸ், திரு. காஜா ஷெரீப், திரு. சையது இப்ராஹிம், மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி ஜெம்ஷீலா, திரு. டோமினிக், திரு. ரவி, ஒன்றியச் செயலாளர்கள் திரு. M.ரமேஷ், திரு. பிரதீப் குமார் ஆகியோர் செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்