புதுச்சேரி : ஏப்ரல் 26, 2025
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரேதசம் காலாப்பட்டு தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக ம.நீ.ம வின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலம் பொதுச்செயலாளர் திரு.சந்திரமோகன் அவர்களது தலைமையில் நடைபெற்றது அது குறித்த செய்தி அறிக்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன் தொகுப்பினை கீழே காணலாம்.
புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.



மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளர் திரு.G.R. சந்திரமோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி புறநகரப் பொதுச் செயலாளர் திரு. பா.முருகேசன் முன்னிலை வகித்தார்.



கிழக்கு கடற்கரைச் சாலையில் கட்சிக் கொடியேற்றி வைத்து, கல்வெட்டை திறந்துவைத்த கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், ஆலோசனைக் கூட்டத்தில் எழுச்சி உரையாற்றினார். கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய நிர்வாகிகள் நியமனம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது, பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. ரூபன் தாஸ், திரு. சக்திவேல், செயல் வீரர்கள் திரு. பழனிவேலன், திரு. சக்திவேல் பட்டுரோஸ், திரு. கமல்ராஜ், திரு. பசுபதி, திருமதி. ஜெயந்தி சந்திரமோகன், திருமதி. செல்வி மற்றும் தொகுதி செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நற்பணி இயக்கத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வழக்கறிஞர் மாணவரணி அமைப்பாளர் திரு. G.R.C.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். – மக்கள் நீதி மய்யம்



நன்றி : மக்கள் நீதி மய்யம்