சென்னை : ஏப்ரல் 30, 2025

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுரையின்படி விருகம்பாக்கம் தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் பேருரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகிக்க விருகை மாவட்ட செயலாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முறையே சைதை மற்றும் வேளச்சேரி மாவட்டச் செயலாளர்கள் திரு.சைதை கதிர் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றினர். இந்நிகழ்வில் 40 பெண்கள் மற்றும் 5 திருநங்கைகள் ஆகியோர் தங்களை கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் சட்டபேரவை தேர்தலில் பங்கு கொள்வது குறித்தும், கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் முதலான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. முக்கியமாக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நலத்திட்டப் பணிகள் வழங்குவது ஆகியனவும் ஆலோசிக்கப்பட்டது.

வாருங்கள் ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்