கோவை : மே 03, 2025

உழைப்பாளிகள் தினமான மே 1 அன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் விழா. சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏற்பாட்டில் கட்சியின் துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் கொடியேற்றி வைத்தும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டும் மே தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மே தின விழா வெகு விமரிசயாக கொண்டாடினார்கள். அதன்படி கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் 81 ஆவது வார்டில் மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் மே தினக் கொடியேற்று விழா !

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது ஆலோசனையின்படி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 81-வது வார்டு பகுதியில் மே தினக் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. பிரபு அவர்கள் நம்மவர் தொழிற்சங்கப் பேரவைக் கொடியை ஏற்றிவைத்தார்.

தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் திரு. வெங்கட்ராஜ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜுதீன், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மண்டல அமைப்பளர் திரு. செவ்வேள் ஆகியோர் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை 81-வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், சமூக ஊடக அணி, இளைஞர் அணி, தொழிலாளர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் மாவட்டப் பொருளாளர் திரு. சிராஜுதீன், துணைச் செயலாளர் திரு. சத்தியநாரயணன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. கார்த்திகேயன், திரு. சக்கரவர்த்தி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ஞானசேகர், மாநகரச் செயலாளர்கள் திரு. மீனாட்சி சுந்தரம், திரு. பூபதிராஜ், திருமதி. சாந்தி (கோவை தெற்கு), திருமதி. சாந்தி (கோவை வடக்கு), வட்டச் செயலாளர்கள் திரு. கார்த்திக், திரு. ஆனந்தராஜ், திரு. மணிகண்டன், திரு. ஆனந்தகுமார், திரு. ராஜ்கமல் மற்றும் கிளைச் செயலாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்