கோவை மாவட்டம் ஜனவரி 11, 2022
கோவை தெற்கு 80வது வார்டு
வந்த பின் நொந்து கொள்வதை விட வருமுன் காப்பதே சிறப்பு எனும் வட்டார வழக்கு சொல்லாடல் பெரும்பாலும் நிறைய விஷயங்களுக்கு பொருந்திப் போகும்.
அப்படி ஓர் முக்கியமான செயல் குற்றங்கள் நடப்பதை தவிர்க்கும் அல்லது குறைக்கும் பொருட்டு ஓர் அதி முக்கியமான நற்செயல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது.
உழைத்துக் களைத்து வீடு சேர்ந்து இரவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும் சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணம் களவு போகாமல் கருத்தாய் காத்திட, பள்ளி சென்று வரும் வளரும் பிள்ளைகள் பாதுகாப்பாய் அவரவர் தெருக்களில் ஓடி ஆடி விளையாடி மகிழ, பதின் பருவ பெண் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருடைய பெண்கள் சற்றும் பயமில்லாமல் தெருக்களில் நடமாட இயலாத நிலை குறிப்பிட்டு சொல்ல இயலாதபடி குற்றச்செயல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு வருவது மனசுக்கு துயரத்தையும் வேதனையும் கடும் இழப்புகளையும் தருகிறது.
வயது வித்தியாசம் இல்லாமல் குற்றச்செயல்கள் செய்யும் சமூக விரோதிகள் அவ்வப்போது வகையாக சிக்கிக் கொள்வது நகரின் முக்கியமான சந்திப்புகளில் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் தெருக்களில் நிறுவப்பட்டு இருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பங்கு அதிகம். குற்றம் இழைத்து விட்டு ஓடினாலும் ஒளிந்தாலும் வெகு விரைவில் காவல்துறையால் மடக்கிப் பிடித்து தண்டனை பெற்றுத்தர அத்தைகைய கண்காணிப்பு காமெராக்கள் அவசியம் ஆகிறது.
கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனி வார்டு எண் 80 இல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அவ்வப்போது சில குற்றச்செயல்கள் நடந்து வந்ததால் மேலும் அசந்தர்ப்ப அறிமுகமில்லாத மனிதர்கள் நடமாட்டங்கள் ஆகியவைகளை கண்காணிக்கும் பொருட்டு அப்பகுதி மக்களின் நீண்ட நெடுநாளைய கோரிக்கை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தி தருவது. இந்த அவசரத் தேவை மட்டுமல்லாது அவசியத் தேவையும் கூட என்று உணர்ந்த நமது மக்கள் நீதி மய்யம் சார்பாக நகர செயலாளர் திரு தாஜுதீன் அவர்கள் தனது சக மய்யம் நிர்வாகிகள் உடன் இணைந்து உடனடியாக செயலில் இறங்கி அப்பகுதியில் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவியது குறிப்பிடத்தக்கது. தமது தலைவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், ஆளும் கட்சியினர், மாற்றுக் கட்சிகளின் வரம்பற்ற எதிர்ப்புகுரல் எழுந்தும் இப்படி ஓர் நற்செயலை மய்யம் செய்து முடித்துவிட்டால் அங்கே தமது கட்சியின் செல்வாக்கு செல்லாகாசாகி விடும் எனும் ஒவ்வாத எண்ணத்தை கொண்டிருந்த இதர கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் தொடர்ந்து அழுத்தம் தந்தாலும் அத்தகைய தடைகளை தகர்த்து பொதுமக்களின் நலனே மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள் என முழுவீச்சில் நற்செயல் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு நிறுவிய கேமராக்கள் மக்களின் பயன்பாட்டுக்கு 11.01.2022 அன்று அர்ப்பணித்தார் கட்சியின் துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள், மய்யம் நிர்வாகிகளை வெகுவாக பாராட்டி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.