கோவை தெற்கு ஜனவரி 30, 2022
கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து)
உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட துணைச் செயலாளர் திரு. சத்திய நாராயணன் தலைமையில் சென்றனர் நமது மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறவுகள்.
அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வாக்குகள் சேகரிக்க வந்த வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளிடம் அங்கே குவிந்திருந்த சாக்கடை கழிவுகளை சுட்டிக்காட்டி அவற்றை அகற்றி சுத்தம் செய்யாமல் இருப்பதை சொன்னார்கள்.
இரண்டு நாட்களாக இப்படியே துர்நாற்றம் வீசுகிறது எனவும் பலமுறை கேட்டுக் கொண்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக கவலையுடன் தெரிவித்தனர்.
இதைக் கண்ணெதிரே கண்டும் கேட்ட நமது மய்யம் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் ஆகியோர் மற்ற கட்சிகளின் மேனா மினுக்கும் ஆட்கள் போலல்லாமல் அதைச் செய்யும் நபர்களுக்காக காத்திருந்து நேரம் கடத்தாமல் எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் செயலில் இறங்கி அங்கே இருந்த சாக்கடை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து தந்தார்கள்.
இந்த நற்செயலை செய்து அதிரடி காட்டிய நிர்வாகிகள் மாநகர செயலாளர் தாஜுதீன், வார்டு செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி சேகர், ராஜ்கமல், வெங்கட் ராஜ் மற்றும் பிரதிஸ் ஆகியோர்களை வெகுவாக பாராட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர் அங்கே வசிக்கும் மக்கள்.
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல் என்று தலைவர் கூற்றின் படி மய்ய நிர்வாகிகள் என்றும் ஒரு படி முன்னே என மக்கள் பணியில் அவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.