கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் அதை ஓரிடத்தில் குவித்து வச்சு அங்கிருந்து ரெண்டு கையால கொஞ்சம் போல அள்ளி பத்தடி தள்ளி வீசினா எல்லாம் ஒன்னு தான் ஆக மொத்தம் மண்ணு தான்.
அதே தான் இந்த திமுக அரசு இப்ப செய்யுறதும்.
அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் வழிமுறைகள் விதிமுறைகள் என எதையும் கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்ததும் கிணற்றில் போட்ட கல்லாக பல வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.
நீண்ட நெடுங்காலமாக திமுக விற்கே ஓட்டு போடுபவர்கள், இதற்கு முன்னர் அதிமுக ஆட்சியில் அதிருப்தி கொண்டவர்கள் மட்டுமில்லாது இனிக்க இனிக்க செய்த பலவிதமான வாக்குறுதிகள் உண்மையான ஒன்றாக இருக்கும் என்றும் மேலும் பத்து வருட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பவர்கள் இனி ஆட்சி அமைத்தால் எந்த முரண்பாடுகள் இன்றி சிறப்பான நிர்வாகத்தை வழிநடத்திச் செல்வார்கள் எனும் நம்பிக்கையில் விழுந்த ஓட்டுக்கள் இன்றைக்கு அடித்தட்டு வகுப்பு குடும்பத்தினர் முதல் மத்தியதர குடும்பத்தினர் வரை ஒட்டுமொத்தமாக அவர்களின் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது 70 ஆண்டு கால பாரம்பரிய கட்சி விடியலை தருவோம் என்று ஊர் முழுக்க சலிப்பு தட்டும் அளவிற்கு விளம்பரங்கள் செய்த திமுக.
இதோ உள்ளாட்சித் தேர்தல் நடக்கபோவது எல்லோருக்கும் தெரியும், அதனால் மீண்டும் மைக் செட்டை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வீதி வீதியாக வளம் வருகிறார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர்கள். மீண்டும் இப்போது அதே போல கட்டுகட்டாக வாக்குறுதிகளை நிரப்பி வழுவழு காகிதங்களில் அச்சிடப்பட்ட பட்டியலை தந்து செல்கிறார்கள்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து அவரை பரிந்துரை செய்துவருகையில், அங்கே சாலையில் குழுமியிருந்த பொதுமக்களில் பெண் ஒருவர் இப்படிக் கேட்டார்
பெண்: கூட்டுறவு பேங்குல நகையை தரல
திமுக அனுதாபி : யார்ரா அது ! வாயை மூடச் சொல்லு
இப்படி கேட்பவர்களை இன்னும் எத்தனை பேர்களை அடக்கச் சொல்லி மிரட்டுவீர்கள் ?