திருவொற்றியூர் பிப்ரவரி 2022
இம்மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டு தேர்வானதும் அதை உட்கட்சி விவகாரமாக அறிவிப்பு செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.
அப்படி தங்கள் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று போட்டியிட விருப்பம் கொள்வோர் நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக கட்சியின் தலைமை மூலம் நிறுத்தப்படும் வேட்பாளர் தகுதியான நபர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற வரைமுறைகள் என எதுவும் கிடையாது என்பதாக பல கட்சிகளில் அரங்கேறும் காட்சிகள் கண்டு வருகிறோம்.
அப்படி ஒரு கண்கொள்ளா காட்சி ஆளும் திமுக வின் கிளை அலுவலகம் ஒன்றில் நடந்தது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் கவுன்சிலர் சீட்டுக்கு விண்ணப்பித்த பலர் அதற்கான நகர்வில் ஈடுபட்ட போது அங்கே பட்டவர்த்தனமாக பேரம் பேசும் காட்சியை கீழே தருகிறோம்.
ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு 2 கோடி 5 கோடி தருவதாக சில நிர்வாகிகள் சொல்றாங்க.
இப்படி கோடிகளை கொட்டிக் கொடுத்து ஜெயித்து விட்டால் போட்ட பணத்தை எப்போது எப்படி எடுப்பார்கள். மக்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். அரசியலை வணிகம் போன்று மாற்றிய திமுக அதை பரிசோதனை செய்த மதுரை திருமங்கலம் ஃபார்முலா அதை அப்படியே காப்பி அடிச்ச இன்னொரு கட்சி அதிமுக ஒரு ஓட்டுக்கு (இப்போது அந்த லிஸ்டில் பிஜேபியும் சேர்ந்துள்ளதாக தகவல், அதன் தரவுகள் கிடைத்த பின்னர் இங்கே சேர்க்கப்படும்) அப்படி சொற்பமாக கொடுக்கப்படும் பணம் ஐந்து வருடங்கள் முழுக்க உங்களுக்கு செலவழிக்கும் அளவிற்கா இருக்கும்.
மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும். ஒருமுறை உங்கள் கண்பார்வையை வாக்கு செலுத்தும் மெஷினில் டார்ச் லைட் சின்னத்தில் நிறுத்துங்கள். கை விரலை அதற்கு நேரான பொத்தானில் அழுத்துங்கள். உங்க வீட்டில் உள்ள ஒருவர் போட்டியிடுவதாக எண்ணுங்கள் ஏன் என்றால் அது தான் மக்கள் நீதி மய்யம்.
மக்கள் நீதி மய்யம் என்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்காது, அப்படி பிற கட்சிகள் பணம் கொடுப்பதை ஒரு போதும் ஊக்குவிக்காது. ஓட்டுக்கள் அளிக்க பணம் பெறுவதை நிறுத்துங்கள். உங்கள் நேர்மையை நிரூபணம் செய்யுங்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது வாங்குவது இரண்டும் சட்டப்படி குற்றம்.