சென்னை பிப்ரவரி 21, 2022

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக சட்டமன்ற வளாகத்தில் தலைமைச் செயலரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மனு ஒன்றினை கொடுத்தார்.

ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் அமைத்து மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று சுமார் 12 ஆண்டுகளுகக்கு முன் சட்டமியற்றப்பட்டும் ஏனோ இதுவரை அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, அதனை தகுந்த முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அப்போது துணைத்தலைவர் திரு AG மௌரியா, திரு கோவை தங்கவேலு, மாநில செயலாளர்கள் திரு சிவா இளங்கோ மற்றும் திரு செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைமைச் செயலரை சந்தித்து விட்டு திரும்புகையில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு கமல்ஹாசன் பேசியதாவது :-

“மக்கள் நீதி மய்யத்தின் 5 ஆம் ஆண்டில் முதல் நாளான இன்றைக்கு உள்ளாட்சி அமைப்பில் மக்களின் பங்கேற்புடன் வார்டு கமிட்டி (அ) நகர வார்டு சபைகள் அமைக்கப்பெறவேண்டும் என்று அதற்கான மனுவை தலைமைச் செயலரை சந்தித்து கொடுத்திருக்கிறோம் இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து பேசியவர் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல, அறவழியில் மட்டுமே எங்கள் போராட்டம் இருக்கும், எங்களின் கடமை சரிவர செயல்படாமல் இருக்கும் அரசை ஸ்தம்பிக்க வைப்பது மட்டுமே என்றும் வெளியே வராத மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டால் எப்படி நோய்த் தாக்காது என்று சொல்லி சொல்லி அவர்களை வெளியில் வரவைத்தோமோ அதுபோன்று இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்க வரவைக்க வேண்டும்” என்றார்.

https://youtu.be/Bs_Ta69JtKU