தஞ்சை களிமேடு ஏப்ரல் 27, 2022
தஞ்சை மாவட்டம் களிமேடு எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் திருவிழா நடைபெறும் போதினில் உற்சவர்கள் கடவுளர்கள் சிலைகளை வீதி உலா கொண்டு செல்வது வழக்கம். அதன்படி ஊர்மக்கள் கூடி இழுத்துவரப்பட்ட தேர் உச்சியில் உயரழுத்த மின்சார கேபிள்கள் உரசியதால் நிகழ்ந்த விபத்தில் 11 பேர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விபத்தின் காரணங்கள் இனி வரும் விசாரணையின் மூலம் தெரிய வரலாம். இதற்குமுன்னர் மதுரையில் நடந்த சித்திரைத் திருவிழாவில் இருவர் சிக்கி மரணம் அடைந்தது ஓர் துயர் என்றால் இந்த களிமேடு தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கப்பட்டு 11 பேர் பலியான சம்பவம் ஓர் படிப்பினை பாடம். இதில் யார் யாரெல்லாம் தங்கள் பணிகளைச் சரிவர செய்யவில்லை எவருடைய அலட்சியம் இதனை உயிர்கள் பலியாக காரணம் என்பதைத் தாண்டி மாண்டு போன உயிர்களின் விலையாக என்ன தந்துவிட முடியும். இதில் என்ன நடந்தது எதனால் நடந்தது உண்மை என்னவென்பதை உடனடியாக ஆராய்ந்து இனிவரும் நாட்களில் இது போன்ற பலிகள் ஏதும்நடைபெறா வண்ணம் உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என இதைச் செய்து முடிப்பதற்கு தேவையான பாதுகாப்பான முறையில் செய்திட வேண்டும் என்பதை அழுத்தமாக கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம், மட்டுமல்லாது இத்தகைய நிகழ்வுகளின் போது அங்கே பங்குபெறும் பொதுமக்களும் அரசு நிர்வாகத்தையும் இதர துறைகளின் ஆலோசனைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் கடைபிடித்து ஒற்றுமையுடன் கொண்டாட்டங்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளும் மய்யம் மற்றும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலிகளையும் அவர்தம் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.