நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022
- வெள்ளையங்குப்பம்
- பெருமாத்தூர்
- வேலுடையான் பட்டு
- கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை)
- வெண்ணெய்குழி
- தாண்டவங்குப்பம்
- நெய்வேலி
- கெங்கைகொண்டான்
- பாப்பனம்பட்டு
- வேப்பங்குறிச்சி
- தெற்கு வெள்ளூர்
- வடக்கு வெள்ளூர்
- மூலக்குப்பம்
- காரக்குப்பம்
- ஆதண்டார்கொல்லை
- மந்தாரக்குப்பம்
- சாணாரப்பேட்டை
- அத்திபட்டு
- வினை சமுட்டிக்குப்பம்
- தெற்கு மேலூர்
- இளவரசன் பட்டு
- விளாங்குளம்
- நொடுத்தாங்குப்பம்
மேலே நீங்கள் காண்பது ஊர்களின் பெயர்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறது. ஆம் உங்களின் யூகம் சரியே நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைய நிலக்கரியை வெட்டி எடுக்கவும் அதில் பணிபுரிய உள்ள ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதிகளை செய்து தர வேண்டியும் அந்த ஊர்மக்களை அப்புறப்படுத்தி வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாச்சலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் மற்றும் கிழக்கே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலங்களை தந்த கிராம மக்களுக்கு சுரங்கப் பணிகள் துவக்கியபிறகு உள்ளூர் மக்களுக்கு தகுந்த பணிகள் தந்து ஊழியர்களாக அமர்த்தப்படவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டே பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. காலப்போக்கில் பணியில் அமர்த்தப்படும் தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கின.
தற்போது மிகச் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் பட்டதாரிப் பொறியாளர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது மாறாக அவர்கள் அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி முற்றிலுமாக தமிழக பட்டதாரி திறமைசாலிகளை புறக்கணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் பெரும்பங்கு இருக்க வேண்டும் என்றும் அரசின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் யாவும் இந்த நாடு முழுக்க வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் பெரும் மனதோடு தாங்கள் பூர்விகமாக வாழ்ந்து வந்த கிராமங்களை தந்த மக்களுக்கு துரோகம் செய்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்படி தமிழர்களின் கண்களில் சுண்ணாம்பு வைக்கும் என்எல்சி நிர்வாகம் மூலம் நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழக இளைஞர்களை தேர்வு செய்து பணிகளை வழங்கிட வேண்டும் என்று கோரும் மக்கள் நீதி மய்யம் இதுவரை இப்படி வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வரும் தேர்வர்கள் பின்னணியை ஆராய்ந்து அவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றும் அழுத்தமாக கருத்துகளை முன் வைக்கிறது ம.நீ.ம