பரந்தூர், ஆகஸ்ட் 21, 2022
இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் எனும் இடத்தை தேர்வு செய்து இருந்தது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கென பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் அரசின் 2700 ஏக்கர் தவிர்த்து இன்னும் 2000 ஏக்கர் தேவைப்படும். அவற்றை பொதுமக்களின் சொந்த நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் வசிப்பிடங்களும் சுற்றிலும் நீர் பாசனம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்கள். என்ன தான் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்றாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்துவரும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு பணத்தை விட விளையும் பூமியே முக்கியம் என்று முடிவு செய்து விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுத்தக் கூடாது என்று போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று பல கிராமங்களில் கருப்புக் கொடிகள் கட்டி தங்கள் எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.